Header Ads



அமைச்சர்களுக்கு எதிராக, ரணிலின் "ரெட் கார்ட்"

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கு பிரதமரினால் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகள் மற்றும் பிரதி அமைச்சு பதவிகளை பெற்று கொண்டுள்ள போதிலும் கடந்த அரசாங்கத்தின் போது ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்டத்தை முழுமையாக செயற்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அமைச்சு பதவிகள் பெற்றுகொண்டிருந்தாலும் பொது மக்களின் சொத்துக்கள் திருடப்பட்டு, மோசடிகாரனாக இருந்தால் அவ்வாறானவர்களுக்கு எதிராக பொருத்தமான தண்டனைகளை வழங்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளது. 

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சில உறுப்பினர்கள் தொடர்பில் சமூகத்தில் அதிகம் விமர்சிக்கப்படுவதனை கருத்தில் கொண்டே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒருவருக்கும் ஊழல் மோசடிகளை மறைத்துக்கொள்வதற்கு அமைச்சர் பதவிகளையும் அதன் அதிகாரங்களையும் தவறாக பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படாதென பிரதமர் உறுதியளித்துள்ளார்.

1 comment:

  1. மிகப்பெரிய அரசியல் ஜோக்கர்

    ReplyDelete

Powered by Blogger.