நாட்டில் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களில் 30 வீதமானவை தரமற்றவை
நாட்டில் மக்கள் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களில் 30 வீதமானவை தரம் குறைவானவை என பேராசிரியர் சேனக பிபிலே நினைவு அமைப்பு தெரிவித்துள்ளது.
மருந்துப் பொருட்களை குறித்து தர நிர்ணயங்ளை விதிக்க 100 நாள் அரசாங்கம் அதிகாரசபை ஒன்றை நிறுவிய போதிலும். நாட்டில் தரம் குறைந்த 30 வீதமான மருந்துப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மருந்துப் பொருட்களின் உண்மையான விலைகளை ஒப்பீட்டளவில் நோக்கினால் 200 முதல் 800 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளதாக அமைப்பின் தேசிய இணைப்பாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சனநெரிசல் மற்றும் மருந்துப் பொருள் தட்டுப்பாடு காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் 55 வீதமானவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர்.
உலக நாடுகளில் நோயாளி ஒருவருக்கு அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் செலவிடும் தொகையில் ஒப்பீடு செய்யும் போது இலங்கையில், ஒப்பீட்டளவில் 20 மடங்களில் ஒரு பங்கே செலவிடப்படுகின்றது.
உலகின் பல நாடுகள் ஒரு நோயாளிக்காக வருடாந்தம் 615 டொலர்களை செலவிட்ட போதிலும் இலங்கையில் 34 டொலர்களே செலவிடப்படுகின்றன.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறைக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதம் ஒதுக்கப்பட வேண்டுமென டொக்டர் ஜயந்த பண்டார கோரியுள்ளார்.

Post a Comment