Header Ads



இருளில் மூழ்கிய இலங்கை - உடனடி விசாரணைகள் ஆரம்பம்

நேற்று நள்ளிரவு நாடுபூராகவும் மின்சாரம் தடைப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் நிலைமை அதிகாலை 03.30 - 04.00 மணிவரையான காலப்பகுதிக்குள் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை தலைவர் அனுர விஜேபால குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை மின்சாரம் தடைப்பட்டமைக்கு தொழிநுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இது குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன்மூலம் இனிமேல் இவ்வாறு நடக்காது தடுக்க முடியும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 

அத்துடன் இதனால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமம் தொடர்பிலும் அவர் தனது கவலையை வௌியிட்டுள்ளார். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மின் சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய மின்சார சபை தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

3 comments:

  1. my3 அசமந்த போக்கினால் , இராணுவத்தின் மூலம் இலங்கையை கைப்பற்ற ஒத்திகை பார்க்க பட்டுள்ளது.

    ReplyDelete
  2. If Gotabaya is in power, the power could have been resumed by 10.30pm following few good words to Chairman/CEB. this is the difference between two Govts.

    ReplyDelete

Powered by Blogger.