சவூதி அரேபியாவின் விளக்கமும், ஈரானில் ஆர்ப்பாட்டமும்..!
சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு ஹஜ் பயணம் சென்ற 18 இந்தியர்கள் உள்பட 717 பேர் மினா நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்கள்.
இந்த துயர சம்பவத்துக்கு சவுதிஅரேபியா அரசின் பாதுகாப்பு குளறுபடியே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அதை சவுதிஅரேபிய அரசு மறுத்துள்ளது.
யாத்ரீகள் கூட்டத்தின் போது கடை பிடிக்க வேண்டிய நெறி முறைகளை பின்பற்றவில்லை. அதனால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் விபத்து ஏற்பட்டது என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதிஅரேபியாவின் சுகாதார துறை மந்திரி காலித் அல்–பாலிக் தனது அமைச்சக இணைய தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி இச்சம்பவத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் விவரம் அறியப்பட்டுள்ளது. மொத்தம் 863 பேர் காயம் அடைந்துள்ளனர். மினாவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு சில யாத்ரீகர்கள் அதிகாரிகள் கூறிய வழி முறைகளை பின் பற்றாததே கூட்ட நெரிசலுக்கு காரணமாகி விட்டது.
ஒருவரையொருவர் முண்டியடித்துக் சென்று விபத்து ஏற்பட்டுவிட்டது. காயம் அடைந்தவர்கள் மெக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். என தெரி விக்கப்பட்டுள்ளது.
சவுதி மன்னர் சல்மான் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். விசாரணையில் ஐமாத் புனித தளத்தில் சாத்தான் மீது கல் எறியும் இடத்திற்கு சென்ற 2 பெரிய யாத்ரீகர்கள் குழுக்கள் மெக்காவில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் குறுக்கு ரோடுகளில் மோதிக் கொண்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டு விபத்து நேரிட்டது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே சவுதி அரேபியாவில் நடந்த இச்சம் பவத்துக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஈரானை சேர்ந்த 131 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவுதிஅரேபியாவின் நிர்வாக திறமையின்மையை இச்சம்பவத்துக்கு காரணம் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. ஈரான் சவுதி அரேபியாவின் எதிரி நாடு ஆகும். நேற்று மதியம் தொழுகை முடிந்ததும் ஈரான் தலைநகர் தெக்ரானில் போராட்டம் நடந்தது.
ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள ஈரான் அதிபர் ஹாசன் ரக்கானி மற்றும் அந்நாட்டின் சுப்ரீம் தலைவர் அயாதுல்லா அலி காமெனி ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இறுதிநாள் வரை
ReplyDeleteஇப்படி அடிபட்டுக்கொண்டே
இருங்கள்.
உங்கள் ஒற்றுமையின்மையால் வரும்
துயரங்களை மறைப்பதற்கு மட்டும்
உடனே, 'மேற்குலகின் சதி' என்று
ஒரே குரலில்
முகாரி பாடுங்கள்!
மெக்கா அல்ல மக்கா திருத்திக்கொள்ளுங்கள்
ReplyDeleteமெக்கா அல்ல மக்கா திருத்திக்கொள்ளுங்கள்
ReplyDeleteFirst we have to tell to the saudi goverment to stop Siya to enter haram area as like earlier(iranian) and this is not for fighting place.
ReplyDeleteஈரான் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டுகிறது
ReplyDeleteஇது வஹ்ஹாபிகளுக்கும் ஷீயாக்களுக்குமிடையில் நடக்கும் சண்டை.
ReplyDeleteLet not jump blaming ... but wait for detail investigation, Then the truth will come and our brothers and sisters will know the reality with evidence. The true face of IRAN will come open to our sunni brothers and sisters who do not know the real face of this SHIA and their history.
ReplyDelete