Header Ads



சிறுபான்மை சமூகத்தினால் மட்டும், அரசாங்கமொன்றை கவிழ்க்க முடியாது - ரவூப் ஹக்கீம்

யாசகனின் காயத்தைப் போன்று எந்த நாளும் போர் பற்றி பேசுவதில் பயன் கிடையாது என நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நிதி ஒழுங்கு சட்டமூலம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

எந்த நாளும் போர் பற்றி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சிறுபான்மை சமூகத்தினால் மட்டும் அரசாங்கமொன்றை கவிழ்க்க முடியாது. இதற்கு சிங்கள மக்களின் ஆதரவும் அவசியமானது.

இன்று நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர், பிரதம நீதியரசர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் ஆகிய பதவிகளை சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் வகித்து வருகின்றனர்.

இதனால் ஒரு சில விடயங்களில் நெகிழ்வுத்தன்மையை பின்பற்ற வேண்டியது அவசியமானது என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.