நாட்டின் சமூகப் பரிணாமத்திற்கு வித்திட்ட அரசியல்வாதியான S.W.R.D.பண்டாரநாயக்கவின் 56ஆவது நினைவு தினம் இன்று (26) அனுஸ்டிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்து 1956 ஆம் ஆண்டில் புரட்சிக்குத் தலைமை தாங்கிய S.W.R.D. பண்டாரநாயக்க மக்கள் உள்ளங்களில் இடம்பெற்றார். இவர் இலங்கையின் 4 ஆவது பிரதமராவார். ஜனசத்து திட்டத்தின் ஊடாக போக்குவரத்து, சுகாதாரம், கலாசாரம் ஆகிய துறைகளை மக்கள் நலன்புரி விடயங்களுக்கு முழுமையாக ஈடுபடுத்த S.W.R.D. பண்டாரநாயக்க முன்னின்று செயற்பட்டார். காலஞ்சென்ற S.W.R.D. பண்டாரநாயக்கவின் நினைவு தின நிகழ்வு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் அத்தனகல்லயில் அமைந்துள்ள அன்னாரின் சமாதியில் இடம்பெற்றது. S.W.R.D. பண்டாரநாயக்கவின் நினைவு தினத்தை முன்னிட்டு கம்பஹா – திஹாரிய விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
Post a Comment