Header Ads



"மூடி மறைக்கும் முயற்சி"

-நஜீப் பின் கபூர்-

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அவற்றின் மீது விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது இந்த உலகின் வழக்கமாக  இருந்து வருகின்ற ஒருவிவகாரம்தான். இப்படி முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் எந்தளவு தூரம் வலுவானது என்பதை அந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றவர்கள் சொல்லுகின்ற ஆதரங்கள், சாட்சிகள்தான் முடிவு செய்கின்றது. 

அந்த வகையில் எமக்குக் கிடைத்திருக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் இன்று நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற அவன்கார்ட் விவகாரம் தொடர்பாக இந்த வாரம் நமது வாசகர்களைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கின்றோம்.

அதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதியின் நிதி நடவடிக்கைகள் தொடர்பாக எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு அவர் கொடுத்திருக்கின்ற பதில்கள் இன்று இந்த நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற நிதிக் கொடுக்கல்வாங்கள்களை மட்டுமல்லாது சட்டம், நீதித்துறை போன்ற நிறுவனங்களையும் கேலிக் கூத்தாக்கி இருக்கின்றது. முதலில் அது பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம் என்று எண்ணுகின்றோம்.

இலங்கை சுயாதீன தொலைக் காட்சி நிறுவனத்தில் தேர்தல் காலத்தில் கட்டணங்களைச் செலுத்தாமல் தனது பரப்புரை நடவடிக்கைகளை அந்த நிறுவனத்தில் ஊடாக மேற் கொண்டு அதற்குக் செலுத்த வேண்டிய 20 மில்லியன் ரூபாய்கள் பற்றி விசாரிக்க சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட விஷேட குழு, முன்னாள் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்ஷவை அழைத்த போது அவர் அந்தக் குழு முன்னாள் ஆஜராவதைத் தவிர்த்துக் கொண்டார். கடைசியில் அந்தக் குழுவினர் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவின் கலடிக்குச் சென்று தமது விசாரணைகளை நடத்தி இருக்கின்றார்கள். குற்றிவாளியை வீடு தேடிச் சென்று விசாரிக்கின்ற சம்பிரதாயத்தை உண்டு பண்ணி அவர் மற்றுமொரு ஆச்சர்யத்தை ஆசியவில் ஏற்படுத்தி இருக்கின்றார் என்று தெரிகின்றது. அதற்கு முன்னரும் தனது மனைவி சிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட  குற்றச்சாட்டுக்கள்  குறித்து விசாரிக்க அதிகாரிகள் அவரது கலடிக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டிருந்தது.

அப்படி நீதிபதிகளை குற்றம் சாட்டப்படுகின்றவர் தனது கலடிக்கு அழைத்து விளக்கம் கொடுப்பது உலகில் வேறு எந்த நாட்டிலாவது நிகழ்ந்திருக்கின்றதா என்பது எமக்குத் தெரியாது. இதிலுள்ள அடுத்த வேடிக்கை என்ன வென்றால் அப்படி அதிகாரிகளின் தலையில் வைத்து மிளகாய் அறைத்ததும் போதாது என்று, ஊடகங்கள் முன் தான் தேர்தலுக்கு நின்றது எனது தேவைக்காக அல்ல, அது கட்சியின் தேவை எனவே இது பற்றிக் கேள்விகளை தற்போது அந்தக் கட்சிக்குத் தலைமைத்துவம்  கொடுக்கின்ற மைத்திரியிடம்தான் விசாரிக்க வேண்டும் என்று ஒரு கேலிக்கூத்தான பதிலை வாழங்கி, இந்த நாட்டின் நடைமுறை நிருவாக அமைப்புக்களை அவமதித்திருக்கின்றார். 

என்மீது விசாரணையா அப்படியான விசாரணை தொடர்பான கோவைகளை சுட்டு நெற்றில் பூசிக் கொள்ளுங்கள் இதற்கெல்லாம் இந்த மஹிந்த அடிபணி மாட்டான் என்பது தான் அவர் இது விடயத்தில் நட்டுக்குச் கொடுத்திருக்கின்ற பதில் என்று குடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். போர்க் குற்றங்கள் பற்றி அவரது பதவிக் காலத்தில் சர்வதேச சமூகம் கேள்வி எழுப்பிய போதும் அவர் இதே பணியில்தான் பதிலளித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அதிகாரத்தில் இருந்த போது மஹிந்த சண்டியன்தான் அதிகார ஆசனத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டிருக்கின்ற இந்த நேரத்திலும் அவர் சண்டியன்தான் என்று தெரிகின்றது. அரசியலைப் பெருத்த வரை இன்று ராஜபக்ஷ சிறைக்கூடம் சென்று ஹீரோவாக வருவதற்கான ஒரு பாதையை தேடிக் கொண்டிருக்கின்றார். எனவேதான் இன்று தன்மீது குவிந்து கிடக்கின்ற குற்றச்சாட்டுக்கள் விவகாரத்தில் விசாரணை என்று வரும்போது  அதற்கு எதிராக அவர் முரண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றார். இந்த விவகாரத்தை கையாள்வதில் முள்ளில்போட்ட சீலையை விடுவிக்கின்ற நிலைதான் தற்போது மைத்திரிக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதனால் இன்று அவர் சிவில் சமூகத்தாராலும் நாட்டில் நல்லாட்சியை எதிர்பார்க்கின்ற சீர்திருத்தவாதிகளிடத்திலும் கடும் விமர்சனத்திற்து ஆளாகி வருகின்றார்.
முன்னாள் பிரதம நீதியரசர் வராவௌ இப்படி எல்லாம் மஹிந்தவுக்குத் தொடர்ந்தும் செயல்பட முடியாது. அரசாங்கம் சட்டரீதியாக அமைத்திருக்கின்ற விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைக்க விட்டால் அவருக்கு எதிராக நீதி மன்றத்தின் ஊடாக நடவடிக்கை எக்க நிறையவே மார்க்கங்கள் இருக்கின்றது. 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டார நாயக்கவுக்கு எதிராகவும் முன்பு ஒரு முறை சட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருக்கின்றது. என்று வராவௌ குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் இந்த விவகாரத்தை அன்று சந்திரிக்க அரசியலாக்கவில்லை. தான் அரசுக்குச் செலுத்த வேண்டி இருந்த பணத்தை செலுத்தி தண்டனையில் இருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டார். ஆனால் ராஜபக்ஷ ஒரு போதும் அப்படி நடந்து கொள்ள மாட்டார் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அவர் நிச்சயம் அரசியலாக்கி நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி தன்னை ஆட்சியாளர் பலிவாங்குகின்றார்கள் என்று காட்டுவதற்காக தன்னை பொலிசார் கைது செய்வதற்காக பதையில்தான் அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை நகர்த்த முனைவார் என்று நாம் எதிர் பார்க்கின்றோம்.  

இப்போது அவன்கார்ட் விவகாரத்தில் என்ன நடந்திருக்கின்றது என்று பார்ப்போம். நேற்றுத் தொலைக் காட்சி விவாதமொன்றில் கலந்து கொண்ட பிரபல சட்டத்தரணி தோமின் கோமஸ் தான் கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகரக இருந்த போது இந்த ஜெனீவா விவகாரத்தில் அதாவது போர் காலக் குற்றங்கள் தொடர்பில் நாங்கள் நியாயமான உள்நாட்டு  விசாரணை ஒன்றுக்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று மஹிந்தவிடம் நேரில் கேட்டுக் கொண்டபோது அதற்கு அவர் தனது இணக்கப்பட்டைத் தெரிவித்தார். ஆனால் இந்த உள்நாட்டு விசாரணையை கோட்டபே ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டார். நாம் ஏன் இந்த விவகாரத்தை இங்கு சுட்டிக் காட்டுகின்றோம் என்றால், ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் அவரை விட அவரது சகோதரர்ளின் கரங்கலே மேலோங்கி இருந்தது என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

கடந்த தேர்தல் காலத்தில் அவன்கார்ட் விவகாரம் மேடைப் பேச்சுக்களின் முக்கிய கருப் பொருளாக இருந்தது. ஆனால் இன்று அது வழக்குகளைப் பதிவு செய்யுமளவுக்குப் பாhரிய ஊழல்கள் நடந்திருப்பதை; தான் காணவில்லை என்று சட்ட மா அதிபர் கருத்துக் கூறி அந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளிவைக்க முனைகின்றார்.

அவரின் இந்த நிலைப்பாட்டை அமைச்சர்களான ராஜித, மற்றும் பட்டலி போன்றவர்கள் விமர்சனம் செய்திருக்கின்றார்கள். அத்துடன் கேபி விவகாரத்திலும் இந்த சட்ட மா அதிபர் இப்படியான கருத்துக்களை வெளியிடுவதை ஒரு போது ஏற்றுக் கொள்ள முடியாது இது விடயத்தில் ஊழல்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் நிறையவே இருக்கும் போது இந்த விவகாரத்தை நாம் ஒதுக்கித் தள்ளினால் கடந்த ஆட்சியாளருக்கு அதாது மஹிந்தவுக்கு நடந்த கொதிதான் இந்த மைத்திரி-ரணில் அரசுக்கும் நிகழும் என்று ராஜித கடும் தொனியில் அமைச்சரவையில் பேசிய போது அதற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் ஆதரவாக அங்கு குரல் கொடுத்திரு;கின்றார்.  இந்த விவகாரத்தை பேசாமல் மூடிமறைப்பதற்காக எனக்கு மாதந்தோரும் 20 மில்லியன் ரூபாய்களை லஞ்சமாகக் கொடுக்க ஒரு சந்தர்ப்பத்தில் முனைந்தார்கள், என்று ராஜித பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருகின்றார்.

ரணில் இதற்கு சற்று மற்றமான கருத்தை தெரிவித்து சட்ட மா அதிபரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் விதமாக அங்கு கருத்துக்களைத் தெரிவிக்க முயன்றபோதுதான் நாம் முன்பு சொன்ன கருத்துக்களை முன்வைத்திருக்கினறார் ராஜித. எனவே இந்த அவன்கார்ட் விவகாரத்தில் பிரதமர்  ரணிலின் நடவடிக்கையும் இப்போது சந்தேகத்துடன்  பார்க்கப்படுகின்றது.

காலியில் கைப்பற்றப்பட்ட மஹநுவர என்ற மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரத்தை மூடி மறைப்பதற்காக 100 நாள் அரசாங்கத்தில் அமைச்சர் ஒவருக்கு மேஜர் நிசங்க  சேனாதிபதி பணம் கொடுக்க முயன்ற விவகாரமும் தற்போது சுட்டிக் காட்டப்படுடுகின்றது.

இந்த அரசாங்கத்தின் நீதி, சமாதனம் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சராக இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த திலக் மரப்பன அவன்கார்ட் விவகாரத்தில் குற்றம் சாட்டப்படுகின்றவர்கள் சார்பில் வழக்கில் ஆஜராவதற்கும் அவர்களுக்கு ஒத்துழைப்பும் வழங்க முயன்றது குறித்து ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது இந்த கதைகளுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை என்று ஊடகக் காரர் ஒருவர் முகத்தில் பாய்ந்து பதில் வழங்குவதைத் அவர் தவிர்த்திருக்கின்றார். அத்துடன் அவன்கார்ட் விவகாரத்தில் குற்றம்சாட்டப் படுகின்றவர்களின் கடவுச் சீட்டுக்களைத் திருப்பி ஒப்படைத்த விடயத்தில் அதற்கான ஆலோசனையை இந்த திலக் மாரப்பனவே வழங்கியதாக சொல்லப்படுகின்றது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சிபாராளு மன்ற உறுப்பினரும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருமான வஜிர அபேவர்தன அவர்களின் தேர்தல் செலவுகளுக்கு அவன்கார்ட் நிறுவனம் பெரும் தொகைப் பணத்தைக் கொடுத்திருந்தது என்று குற்றம் சாட்டப்பட்ட போது இந்த அவன்கார்ட் விவகாரம் என்னுடைய அமைச்சுக்குக் கீழ் வருகின்ற ஒரு நிறுவனம் அல்ல என்று, அவரும் இந்த விடயத்தில் ஊடகங்களின் கேள்விக்குப் பதில் வழங்குவதைத் தவிர்த்திருக்கின்றார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவுடன் மிகவும் நெருக்கமானவர்கள்தான் இந்த எவன்கார்ட் விவகாரத்தில் இரட்டை வேடம் பூணுக்கின்றார்கள் அல்லது குற்றம் சுமத்தப்படுகின்றவர்களுடன் நெருக்கமான உறுவுகளைப் பேணி வருகின்றார்கள். எனவே அதன் பொருள் என்ன என்று நாம் கோள்வி எழுப்புகின்றோம்.

இதுவிவகாரமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் எதிர்க் கட்சிகளின் பிரதம கொரடாவும் ஜேவிபித் தலைவருமான அணுர குமாரதிசாநாயக்க பாராளுமன்றத்தில் கேள்விக் கணைகளை தொடுத்த போது அதற்குப் பதில் கொடுக்க முடியாது பிரதமர் ரணில் அங்கு திக்குமுக்காடி இருக்கின்றார். கடைசியில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அணுரகுமரவின் கேள்விகளின் முக்கியத்துவம் எங்களுக்குப் புரிகின்றது. என்றாலும் அவற்றுக்கு உடனடியாகப் பதில் வழங்குவது கஷ்டமாக இருக்கின்றது என்றும், ஆராய்ந்து பார்த்து அவற்றிற்குப் பதில் கொடுப்பதாக கூறி சமாளித்திருக்கின்றார்.

அணுரகுமர திசாநாயக்காவின் கேள்விகளுக்கு அரசு இன்னும் உரிய பதில் கொடுக்காவிட்டாலும் அவர் அங்கு என்ன கேள்விகளை முன்வைத்தார் என்பதனை நமது வாசர்களுக்கு கூறி வைக்கலாம் என்று நினைக்கின்றோம்.

01.தேசிய பாதுகாப்புக்கு எச்சரிக்கையான நிறுவனத்தை முன்னெடுத்தச் செல்ல பாதுகாப்புச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கின்றதா? அப்படி அதிகாரம் இல்லாவிட்டால் அவருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்ன? 02.ஏ.எஸ்.பி.லியனகே என்பவர் நைஜீரியாவுடன் செய்த உடன்படிக்கையில் கையெழுத்துப் போடுக்கின்றார். அதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கியது யார்? 03.காலித் துறைமுகத்தில் நங்குரமிடுவதற்கு கப்பலுக்கு அதிகாரம் வழங்கியது யார்? அதில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களுக்கு சட்டரீதியான அனுமதிப்பத்திரங்கள் இருந்ததா.? இந்த ஆயுதக் கப்பல் தொடர்பாக பொலிஸ் திணைக்களம் தெரிந்து வைத்திருந்தா? 04.ஒவ்வொரு ஆயுதங்கள் தொடர்பான பதிவுகள் பேனப்பட்டு வந்திருக்கின்றதா? அப்படியானால் அதனை மதிப்பீடு செய்தவர் யார்? 05.பெறப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறப்பட்டிருக்கின்றதா? அனுமதி பெறப்பட்ட அயுதங்கள் தொகை என்ன? 06.கடந்த 100 நாள் அரசாங்கத்தின் பாதுகாபுச் செயலாளராக இருந்த பஸ்நாயக்க தனது பதவிக்கு சம்பந்தமில்லாத வகையில் நீதி மன்ற விவகாரங்களில் தலையீடு செய்ய முடியுமா? அப்படி நடந்து கொண்ட முன்னாள் செயலாளர் விடயத்தில் இந்த அரசு மேற் கொண்ட நடவடிக்கை என்ன? இது பற்றி ஆராய்ந்து அவருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமா? 07.நான் பிரதமரிடம் தெரிந்து கொள்ள விரும்புவது காலித் துறை முகத்தில் மிதக்கின்ற ஆயுதக் களஞ்சியம் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? 08.இந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் தலையீட்டால் பிரதம நீதியரசரினால் மூடி மறைக்க மேற் கொள்ளப்படும் இந்த அவன்கார்ட் விவகாரம் தொடர்பான நடுநிலையான விசாரனையொன்றை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? 09.அவன்கார்ட் நிறுவனத்தின் கடந்த இரு வருடங்களுக்குமான நிதி அறிக்கைப்படி அன்பளிப்பாகவும் பரிசாகவும் 853மில்லியன் ரூபாய்களும், நிறுவனத் தலைவரின் செலவாக 1294 மில்லியன் ரூபாய்களும் இருக்கின்றது, நிறுவனத் தலைவரின் மனைவி செலவு 191 மில்லியன் ரூபாய்களும், பெயர் குறிப்பிடப்படாத செலவுத் தொகை 574 மில்லியன் ரூபாய்கள் என்றும் கணக்குப் பதிவுகள்  இருக்கின்றதே? 10.அவன்காட் நிறுவனத்தின் இந்த சந்தேகமான செலவுகள் என்ன? நிறுவனத்துக்கு அன்பளிப்பாக பணம் வழங்கியவர்கள்;, அமைப்புக்கள் எவை? அந்தத் தொகையின் தனித்தனியான கணக்குகள் என்ன?

இந்த அதிரடிக் கேள்விகளுக்கு இந்த அரசாங்கம் பதில் வழங்க நெடுநாளை எடுத்து குற்றவாளிகளை தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கு முயற்ச்சிக்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றது. சர்வதேச கடற்பரப்பில் தனது பணிகளைச் செய்ய வேண்டிய இந்த மிதக்கும் ஆயுதக் (மஹநுவர) கப்பல் காலித் துறை முகத்தில் இருந்து நகர்ந்ததற்கான பதிவுகளே கிடயாது என்று தெரிகின்றது. மேலும் இதிலிருந்த 3500 துப்பாக்கிகளில் 200க்கும் குறைவானவற்றிற்கே சட்டரீதியான அனுமதி பெற்ப்பட்டிருக்கின்றது என்று பதிவுகள் காட்டுக்கின்றது. அதுடன் 700000 தோட்டக்களும் இதில் அடங்குகின்றது என்ற விடயம் விசாரணைகளிலும் உறுத்திப்படுத்தப் பட்டிருக்கின்றது.

ஒரு அப்பாவிக் கிராமத்தவன் ஒரு உள்ளுர் இடிக்கும் துப்பாக்கியடன் பிடிபட்டால் அவனை சட்டம் என்ன பாடு படுத்தும் ஆனால் இத்தனை ஆயிரம் சட்டவிரோத நவீன துப்பாக்கிகள் பல இலட்சக் கணக்கான தோட்டாக்கள் என்ற விவகாரம் எல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட விடயமாக இருக்கின்ற போது இது சாதாரணவிடயம் என்று சொல்லி மூடி மறைக்க முயல்வது என்ன கொடுமை என்று குடிகள் தரப்பில் நாமும் கேள்வி எழுப்புகின்றோம். இந்த சட்டவரோ ஆயுதங்கள் எத்தனை உயிர்களை பலி யெடுத்திருக்கும் எத்தனை கொள்ளைகளை- சட்டவிரோத நடவடிக்கைகளை செய்திருக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த கதையாகத்தான் இருக்க வேண்டும்.  நடுநிலையான விசாரணைக்கு ஜனாதிபதி மைத்திரி பச்சைக் கொடி என்று கதை! நடக்கின்றதா என்று பெறுத்து பார்ப்போம். 

No comments

Powered by Blogger.