Header Ads



மினா விபத்தில் மரணித்தவர்களின், எண்ணிக்கை அதிகரித்தது


மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 769 ஆக உயர்ந்துள்ளதாக சவுதி தெரிவித்துள்ளது. 

ஹஜ் புனித யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி மெக்கா அருகே உள்ள மினா நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பல லட்சம் மக்கள் ஒரே இடத்தில் திரண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். விழுந்தவர்கள் எழுந்து செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் பலர் மூச்சுத் திணறியும், கால்களில் மிதிபட்டும் இறந்தனர். நேற்று வரை 717 பேர் பலியான நிலையில், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட பலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. 

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி மேலும் 52 பேர் இறந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 769 ஆக அதிகரித்துள்ளதாகவும்,  936 பேர் காயமடைந்ததாகவும் சவுதிஅரேபியாவின் சுகாதார துறை மந்திரி காலித் அல்–பாலிக் தெரிவித்துள்ளார். பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 

No comments

Powered by Blogger.