ஹஜ்ஜுக்கு சென்று திரும்பிய, மாலைதீவு ஜனாதிபதி உயிர் தப்பினார், குடும்பத்தினர் காயம் (படங்கள்)
மாலைதீவு ஜனாதிபதி அப்துல் யாமீன் மற்றும் அவரது பாரியார் பயணித்த அதிவேக படகில் வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
எனினும் இதனால் ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனினும் அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவுதியில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றி நாடு திரும்பிய அவர் , ஹுல்ஹுலே தீவிலுள்ள விமானநிலையத்திலிருந்து படகின் மூலம் மாலே நோக்கி பயணித்துள்ளார்.
பின்னர் அவர்களது படகு தீவை அடைந்தவுடனேயே வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.




Post a Comment