கரப்பான் பூச்சி, என்றால் பயப்படுங்கள்..!
அச்சு அசலாகக் கரப்பான் பூச்சி போன்றே இருக்கும் உளவு ரோபோக்களை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
எதிரிகளுக்கு எள்ளளவும் சந்தேகம் வராமல், அவர்கள் இருப்பிடங்களில் இருந்து கொண்டு, காமிரா வசதியுடன், முக்கிய தகவல்களை அனுப்பும் இந்த ரோபோ கரப்பான்பூச்சி உருவாக்கப்பட்டிருப்பதை அந்நாட்டு அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.
இம்மானுவேல் கன்ட் பால்டிக் பெடரல் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள இந்த ரோபோ நொடிக்கு 30 செ.மீ. நகரும் திறன் கொண்டது. தனியாக இந்த ரோபோவைப் பார்க்கும் போது இது ரோபோ என்று தெரியாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியிருப்போரை கண்டறியவும், எதிரிகளின் நடமாட்டங்களை ராணுவத்தினர் அறிந்து கொள்ளவும் இந்த வகை ரோபோக்கள் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Post a Comment