Header Ads



நவதாரளவாதமும் இலங்கை இந்திய உறவுகளும், தென்னாசிய இனத்துவ சமூகங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும

சமகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட முக்கியத்துவமான  விடயங்களைப் பேசும் சமூக, அரசியல் கலந்துரையாடல்

உரையாளர்கள்
* முரளி சண்முகவேலன் 
 (ஆய்வாளர் -SOAS ) தமிழ் நாடு 

*நிர்மலா இராஜசிங்கம்- (South Asia Solidarity Group )

வழிப்படுத்தல் - தோழர் எஸ். வேலு 

காலம், 03 ஒக்டோபர் 15 (சனி)  பி.ப. 04.00 - 07 .00 மணி வரை
46A , East Avenue,Eastham, , E12 6SG
(near the Eastham station)

நவதாராள வாத அலையின் மேலெழுச்சியினதும் தொடர்ந்து வேரூன்றி வரும் இந்துத்துவ வாத அரசியலினதும் பின்னணியில் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, தென்னாசியாவில் ஏகாதிபத்தியத்தினதும் இஸ்ரேலிய – அமெரிக்க ராணுவக் கூட்டின் மிகச் சிறந்த நண்பருமாவார். இத்தகைய அரசியல் பின்னணி தென்னாசியா முழுவதும் பல்வேறு  பிற்போக்கான இனத்துவ அலைகளாக எதிரொலிக்கின்றது.  நவதாராளவாத்தின் வீறு கொண்ட நடைக்கு துணை போகின்றது.  2002 ம் ஆண்டு குஜராத்தில் 2000க்கு மேற்பட்ட சிறுபான்மை முஸ்லிம்களின் படுகொலையை  நின்று நடாத்திய மோடி தான் இன்று இலங்கையில் சிறுபான்மை மக்களின் உரிமைகள், இறைமைக்கு உத்தரவாதமளிப்பவராக காணப்படுகின்றார். .   மோடியின் கார்ப்பரேட் சமூக சக்திகளின் தலையீடுகளே இன்று இலங்கையின் ‘பொருளாதார அபிவிருத்தியில்’  மேலாட்சியுடன்   காணப்படுகின்றன.  தென்னாசியாவில் இந்திய மேலாண்மையை உறுதி செய்கின்றன. 

நரேந்திர மோடி தனது மிகத்தீவிரமான ஐரோப்பிய ஆதரவாளரான கமரன்-ஒஸ்போர்னைச் சந்திக்க வரும் நவம்பர் மாதம் 12, 13, 14 ல் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.  இப்பின்னணியில் தான் தென்னாசிய தோழமைக் கழகமும் தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகமும்  கூட்டாக இக்கலந்துரையாடலை  ஒழுங்கு செய்துள்ளன.   கலந்து கொள்பவர்கள் தமது கருத்துக்கள் , பார்வைகளை முன் வைத்து உரையாட முடியும். எல்லாரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலதிக தகவல்களுக்கு  07817262980(Fauzer) 07533087523 (Ragavan)


No comments

Powered by Blogger.