சஜின்வாஸ் பல்டி அடிப்பாரா..?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான சாட்சியாளராக முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மாறவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முக்கிய விசாரணைகளில் அரச தரப்பு சாட்சியாளராக மாறுவதற்கு சஜின் வாஸ் குணவர்தன இணக்கம் வெளியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரியளவிலான நிதிமோசடிகள் குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களை வழங்க சஜின் இணக்கம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் சில வாரங்களில் கடந்த அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சில விசாரணைகள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு மிக முக்கியமான கொடுக்கல் வாங்கல்களின் போது இடம்பெற்ற மோசடிகள் பற்றிய விபரங்களை சஜின் வாஸ் குணவர்தன வெளியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமல்ல, இன்னும் நிறைய எதிர்பார்கிறோம்
ReplyDeleteNothing will happen, may be Vaas wants to demand a share from MARA blackmailing him. Any challenge??
ReplyDeleteSame time drama this maybe Melinda idea politics game
ReplyDelete