Header Ads



மகிந்தவுக்கு ஏன் இவ்வளவு? மைத்திரி சீற்றம், தன் பதவிக்காலம் முடிந்ததும் வீடு செல்வேன் என்கிறார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இரு ஜனாதிபதிகள் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது

புதன் கிழமை இடம்பெற்ற வாராந்தர அமைச்சரவை சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது ஜனாதிபதி கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இலங்கையில் இரு ஜனாதிபதிகள் இருக்கமுடியாது அவ்வாறான செயற்பாடுகள் முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும் என்றார் சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி குடும்பத்தினருடன் தங்கியுள்ள பாசிக்குடா சுற்றுலாவிடுதியை சுற்றி முப்படையினர் தீவிரபாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை தொடர்பாகவே சிறிசேன இந்த கருத்துக்களை வெளியிட்டார்.தற்போது வெறுமனே நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரமுள்ள,ராஜபக்சவிற்கு ஏன் இத்தனை பாதுகாப்பு என்பது தனக்கு புரியவில்லை என சிறிசேன தெரிவித்தார்.

ராஜபக்ச தற்போது தனது பாதுகாப்பிற்கு 240 பேரை பயன்படுத்துகின்றார். எனது பதவிக்காலம் முடிவடைந்ததும் நான் உத்தியோகபூர்வ பங்களாக்களை தேடி செல்ல மாட்டேன்,பொலனறுவையில் உள்ள எனது வீட்டிற்கு சென்றுவிடுவேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. முடிவு செய்ய வேன்டிய நீங்களே கேள்வியை முன் வைத்தால் கேட்பவர்கள் யார் எமது நாட்டின் அதிபரே அவரே இப்போ உங்க இடத்தில் இருந்திருந்தால் உங்கலுக்கு எப்படியான பாதுகாப்போடு வீட்டுக்காவலில் வைத்திருப்பார் என்பதும் நீங்கள் ஆறீயாத விடயமல்ல

    ReplyDelete
  2. I am sorry to say .Mr.president u have power,& u are the executive srilankan President as a law u should control the parliament member of mahinda rajapaksa. That's good for ur legitimate govermed .

    ReplyDelete
  3. Mr. president , don,t forgot you are the our executive head of state , what ells you want sir.

    ReplyDelete
  4. Dear President don't forghet that you hve the poewr.Don't aske any one.always you should be a grate Prasident

    ReplyDelete
  5. Dear hons president.
    Why we give to power for you.
    Pls used your power.

    ReplyDelete
  6. Mr.President it's an irritating question while u r in power should not ask this question but put into an action against to them.

    ReplyDelete

Powered by Blogger.