''மக்கா விபத்து, மனித கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது''
இரு நாட்களுக்கு முன்பாக மெக்காவில் பலரது உயிரைப் பலிவாங்கிய விபத்து, மனித கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என சவூதி அரேபியாவின் மூத்த மதகுருவான முஃப்தி ஷேக் அப்துல் அஜீஸ் பின் -அப்துல்லா அல் - ஷேக் தெரிவித்திருக்கிறார்.
மெக்காவில் ஏற்பட்ட விபத்தில் 700க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இது தொடர்பாக சவூதியின் பட்டத்து இளவரசரும் உள்துறை அமைச்சருமான முஹம்மது பின் நயீஃபிடம் பேசிய அவர், இந்தத் துயர சம்பவத்திற்கு அவரைப் பொறுப்பாக்க முடியாது என்றும் விதியைத் தடுக்க முடியாது என்றும் கூறினார்.
விபத்து நடந்த இடத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து, இந்த விபத்தில் தங்கள் குடிமக்களைப் பறிகொடுத்த ஈரான் உள்ளிட்ட நாடுகள் சவூதி அதிகாரிகளை கடுமையாக விமர்சித்துவருகின்றன.

Post a Comment