Header Ads



வர்த்தகர்களை மிரட்டி, பணம் பறிக்கும் இணையத்தளங்கள்..!

வர்த்தகர்களின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இணைய தளங்களில் அறிக்கை வெளியிட்டு அதனை நீக்குவதற்காக வர்த்தகர்களிடம் மிரட்டி பணம் பறித்தல் வியாபாரம் தொடர்பில் இதுவரையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது பிரபலமாக்கப்பட்ட வியாபார நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய இவ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

குறிப்பிடத்தக்க சில இணைய தளங்களில் தங்கள் வியாபாரத்திற்கு அவமதிப்பேற்படுத்தும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவ் அறிக்கைகளை நீக்குவதாக கூறி மேலும் சில வியாபாரிகள் தங்களிடம் பெரிய அளவிலான பணம் வழங்குமாறு கோரியதாகவும் குறித்த நிறுவனங்களின் பணிப்பாளர்கள் இருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபலமான இணைய தளங்களுக்கு இணையான பெயரில் நடத்தி செல்லப்படும் இப் போலியான இணையத்தளங்கள் ராஜபக்ச குடும்பத்தின் புதல்வர் ஒருவரினால் வழங்கப்பட்ட ஓப்பந்தத்திற்கமை பேர்போன தொழிலதிபர் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணரினால் நடத்தி செல்லபடுவதாக இறுவரையில் தெரியவந்துள்ளது.

ஊடக துறையில் பிரபலமானவர்களில் சிலரின் பெயரை பயன்படுத்தி அவர்கள் மிரட்டி பணம் பறிப்பதாகவும் வர்த்தகர்களை ஏமாற்றி இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரையில்  50 மில்லியனுக்கும் அதிக பணத்தை அவர்கள் இவ்வாறு மிரட்டி பறித்துள்ள நிலையில் அவ் அனைத்து பணத்தையும் வெளிநாட்டு வங்கி கணக்குகளில் வைப்பில் இடப்பட்டிருந்தாகவும் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.