Header Ads



டுபாயில் வாகன விபத்து - இலங்கையர் வபாத்

டுபாய் நாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 

இதன்போது உயிரிழந்தவர் குருநாகல் - மள்வாப்பிட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட பிச்சைத் தம்பி பாஹீம் (வயது 36) என்ற இளம் குடும்பஸ்தர் எனத் தெரியவந்துள்ளது. 

இவர் நேற்று டுபாய் கடையொன்றில் பொருட்கள் கொள்வனவு செய்து விட்டு வரும் போது எதிர்பாராதவிதமாக வாகனமொன்றில் மோதுண்டு படு காயமடைந்துள்ளார். 

பின்னர் அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். 

அன்னாரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.