Header Ads



அக்கரைப்பற்றில் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்


(ஏ.எல். நிப்றாஸ்)

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் 2001ஆம் ஆண்டு உயர்தரம் கற்று வெளியேறிய பழைய மாணவர்களின் வருடாந்த குடும்ப ஒன்றுகூடல் 2015 நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை அக்கரைப்பற்று ரீ.எப்.சி. உணவகத்தில் இடம்பெற்றது. 

சகபாடி நண்பாகளுக்கிடையே உறவுகளை பலப்படுத்துவதையும் தமக்கிடையே ஒன்றிணைந்து செயலாற்றுவதையும் நோக்காகக் கொண்டு, முதன்முதலாக ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களின் குடும்ப ஒன்றுகூடல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இந்நிகழ்வு இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 30 பழைய மாணவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர். 

இதன்போது, பாடசாலை காலத்தின் பசுமையான நினைவுகள் மீட்டப்பட்டது மட்டுமன்றி, கற்ற பாடசாலைகள், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பிரதேசத்தின் கல்வி நிலைமை, ஏனைய பொது நலன்கள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அனைவரினதும் நலன் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. 

No comments

Powered by Blogger.