கொழும்பு தனியார் வங்கியில், 55 லட்சம் ரூபா பணம் கொள்ளை போனது
கொழும்பு - தர்மபால மாவத்தை பகுதியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் காவலாளியை தாக்கி விட்டு 5.5 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று (27) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment