சேயா சதெவ்மி கொலை, கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர்
கொட்டதெனியாவ சிறுமி சேயா சதெவ்மியை கொலை செய்தது தாம் என நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளார்.
கம்பஹா பெம்முல்லையில் சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவு பெற்ப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் ஏற்கனவே இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment