மக்காவில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை - அமைச்சர் ஹலீம்
சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரின் மினா பிரதேசத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் இலங்கையர்கள் எவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என இஸ்லாமிய மத விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ந்தும் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புனித மக்கா நகருக்கு அருகில் காத்தானுக்கு கல்லெறியும் மினாவில் சன நெரிசலில் சிக்கி சுமார் 710 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

இது ஒரு வாய்ப்பாடு போலும்.
ReplyDeleteவெளிநாட்டில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனே முந்திரிக்கொட்டைத்தனமாக 'இலங்கையருக்குப் பாதிப்பில்லை' என்று அறிவித்துவிட்டுத்தான் விசாரிப்பது!
பிறகு பிணம் கிடைத்ததும் ஏகத்துக்கு அசடு வழிவது..! தேவையா?