ரணில் அனுப்பிய 19 ஆயிரம் கடிதங்களை மலசலகூடத்திற்குள் போட்டவர்களுக்கு ஆப்பு
மொரட்டுவை தபால் நிலையத்தின் ஊழியர்கள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு அனுப்பிய சுமார் 19 ஆயிரம் கடிதங்கள் கைவிடப்பட்ட மலசலகூடக் குழியொன்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இவற்றில் பெரும்பாலானவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்காளர்களுக்கு அனுப்பிய கடிதங்களாகும்.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே இன்று இரண்டு தபால் ஊழியர்கள் தற்காலிகமாக பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு எதிராக தபால் திணைக்களத்தினால் விசேட விசாரணையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் பொலிசாரும் இது தொடர்பான தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை முடிவில் இவர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் தொழிலிலிருந்து முழுமையாக வெளியேற்றப்படுவதுடன், சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அம்புகளை நொந்தது போதும் எய்தவர்களைப் பிடியுங்கள்!
ReplyDeleteஅம்புகள் சாதாரண ஊழியர்கள்தான். ஆனால் எய்தவர்கள் பணக்கார அதிகார வர்க்கத்தினர். இவர்களை விட்டுவிட்டு சாதாரண ஊழியர்களை பதவியிழக்கச் செய்வதிலே என்ன விவேகம் உள்ளது..?
ஊழியர்களை நம்பி பல வயிறுகள் இருக்கும். அவர்களைத் தொழிலிழக்கச் செய்தால் அந்த வயிறுகள்தான் காயும்.
அம்புகளை ஒழித்து விட்டால் எய்வது எப்படி? அம்புகள்தான் ஒழிக்கப்படவேண்டும்.
ReplyDeletewho ordered ? catch the gentlemen
ReplyDeleteஅறிவுக்கொழுந்தே pina chena!
ReplyDeleteஅம்புகள் இல்லையென்றால் கற்கள். அதுவும் இல்லையென்றால் செருப்புகளைக் கழற்றிக்கூட எறியலாம்.
ஆனால் எறிபவனைத் தடுத்துவிட்டால்...? வெடிகுண்டுதான் இருந்தாலும் வீசமுடியாதே..!