Header Ads



UNP + SLFP உடன்படிக்கை வரப்பிரசாதங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஓர் வழி - JVP

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையானது வரப்பிரசாதங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஓர் வழியாகவே நோக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர்  விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.தேசிய அரசாங்கமொன்றை அமைத்து அதன் மூலம் நாட்டை கட்டியெழுப்புவது இந்த உடன்படிக்கையின் நோக்கமாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் பதவிகளையும் ஏனைய வரப்பிரசாதங்களையும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் நிலையில் இரண்டு கட்சிகளும் தங்களது உறுப்பினர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதில் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வது மக்களின் ஆணையை உதாசீனம் செய்வதாகவே கருதப்பட வேண்டும் எனவும் இதனை மக்களை ஏமாற்றும் ஓர் நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தேசிய அரசாங்கம் அத்தியாவசியமானதன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் நடைபெற்ற காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜே.வி.பி இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக சுதந்திரக் கட்சி குற்றம் சுமத்தி வந்த போதிலும், உண்மையில் யார் யாருடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டுள்ளனர் என்பது தற்போது மக்களுக்கு அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. We know that you want to give Srilankans a decent respectable living . I heard most
    of the younger generation voted for you . But the oldies are adamant about the
    Blues and Greens associated with all sorts of failed and corrupt practices. The signs
    are that you will have to wait longer.

    ReplyDelete
  2. without majourity how to run the parliement?
    jvp should think possible,stopped criticise at always
    publics denied JVP for that reason

    ReplyDelete
  3. National Government means "Jumbo" Cabinet of Ministers,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete

Powered by Blogger.