Header Ads



''பல்டிக்கு தடை'' UNP + SLFP உடன்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைக்கும் தேசிய அரசாங்கத்தின் கால எல்லை முடியும் வரை கட்சி தாவல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்சிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான விடயங்கள் தொடர்பில் தீர்வுகளை காண்பதற்காக இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில், ஒரு பந்தியில் இந்த கட்சி தாவல் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களின் பின்னர், மேலும் காலத்தை நீடிக்க வேண்டுமாயின் அது இரு தரப்பின் இணக்ககத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.


No comments

Powered by Blogger.