Header Ads



ஒழுங்குபடுத்த வேண்டிய முஸ்லிம் அரசியல் நகர்வும், முஸ்லிம் MP களுக்கான மன்றமும்..!

-அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)-

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்தல் பல்­வேறு அம்­சங்­களை எமக்கு உணர்த்­தி­னாலும் அவற்­றுக்கு மத்­தியில் பின்­வரும் முக்­கிய விட­யங்­களைக் குறிப்­பிட்­டுக்­காட்ட முடியும்

ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய முஸ்லிம்களின் அரசியல் நகர்வு

தேர்­தலின் மூலம் நாம் பெற்ற மற்­று­மொரு படிப்­பினை முஸ்­லிம்கள் பிள­வு­பட்­டி­ருப்­ப­தனால் முஸ்­லிம்­க­ளி­டையே சண்டை சச்­ச­ர­வுகள் மென்­மேலும் அதி­க­ரிக்கும் என்­ப­தாகும். தேர்தல் காலத்தில் முஸ்­லிம்­ அர­சி­யல் ­கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்கள் தமக்­கி­டையே மோதிக் கொண்­டனர். ஓர் அர­சி­யல்­வா­தியின் ஊழல்­களை மற்­று­மொரு முஸ்லிம் அர­சி­யல்­வாதி பகி­ரங்­க­மா­கவே மீடி­யாக்­களில் வெளிப்­ப­டுத்­தினார். அது பொது­ப­லக்­கா­ரர்­க­ளுக்கே தூண்­டு­த­லா­கவும் தைரி­ய­மா­கவும் அமைந்­தது. ஊழலில் சம்­பந்­தப்­ப­டு­வது தவ­றுதான். அதேபோல் எமது தவறை எமது தனிப்­பட்ட நலன்­க­ளுக்­காக எமது பொது எதி­ரிக்குக் கூட தெரி­யப்­ப­டுத்­து­வதும் தவ­றுதான். எம்மை எள்ளி நகை­யா­டு­வ­தற்கு சந்­தர்ப்பம் பார்த்துக் கொண்­டி­ருக்கும் அந்த எதி­ரிக்கு  ‘வாய்க்கு அவல்” கிடைத்த கதை­யா­கி­விட்­டது.

தேர்­த­லுக்கு முன்னால் எம்மில் பலரும் வாக்­க­ளிப்­பது என்­பது அமானத், ஷஹாதத், ஷபாஅத் என்ற வகையில் சாரும் என்று பேசி வாக்­கா­ளர்­களை அறி­வூட்டி வந்தோம். அதுபோல் முஸ்லிம் வேட்­பா­ளர்­க­ளுக்கும் பல தகை­மைகள் இருக்க வேண்டும் என்றும் பர­வ­லாகப் பேசப்­பட்­டது. இறை­யச்சம் சமூக உணர்ச்சி, அறிவு திறமை, ஆற்றல், பரந்த மனப்­பான்மை தைரியம் போன்ற பண்­பு­களைப் பெற்­ற­வர்­களை மட்­டுமே நாம் தெரிவு செய்ய வேண்டும். இல்­லா­த­போது அது ‘கவ்லுஸ் சூர்” என இஸ்­லாத்தில் கூறப்­பட்ட பொய்ச் சாட்­சியம் கூறும் குற்­ற­மாகக் கரு­தப்­படும் என்றும் பொது மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. 

அப்­ப­டி­யாயின் தற்­போது பொது மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்­றத்­துக்­கான முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளிடம் இப்­பண்­புகள் எந்­த­ள­வுக்கு இருக்­கின்­றன. முழு­மை­யாக இல்­லா­விட்­டாலும் உயர்ந்த பட்சம் இருக்­கின்­ற­னவா? இவை சிந்­த­னைக்­கு­ரிய அம்­சங்கள்.

பாரா­ளு­மன்றம் செல்லும் இவர்­களை தனி மனி­தர்­க­ளாகப் பார்க்க முடி­யாது. அவர்கள் முஸ்லிம் சமூ­கத்தின் தலை­வர்கள்; பிர­தி­நி­திகள். சமூ­கத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான பிரச்­சி­னைகள் உள்­ளன. அவற்றைத் தீர்ப்­ப­திலும் அவர்­க­ளது பங்கு மகத்­தா­னது. அவர்­க­ளது ஒவ்­வொரு அசை­வுக்கும் வார்த்­தைக்கும் பெறு­ம­தி­யுண்டு. நிலைப்­பா­டு­களை எடுக்க முன்னர் கருத்­துக்­களை வெளி­யிட முன்னர் அவர்கள் வெகு தூரம் சிந்­தித்துக் கொள்ள வேண்டும். 

எனது ஒவ்­வொரு வார்த்­தையும் நாட்டின் நலனைப் பாது­காக்­குமா? அல்­லது பாதிக்­குமா? நான் பிர­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சமூ­கத்தின் வளர்ச்­சிக்கு உத­வுமா? அல்­லது இன்னும் அதனைக் குட்டிச் சுவ­ராக்­கி­வி­டுமா என அவர்கள் சிந்­திக்க வேண்டும். சமூ­கமும் அவர்­களைத் தனி­மைப்­ப­டுத்­தி­வி­டாமல் அவர்­களை நெறிப்­ப­டுத்­தவும் தேவைப்­ப­டும்­போது  அவர்­களைப் பாது­காக்­கவும் முயற்­சி­க­ளை­யெ­டுக்க வேண்டும். குறிப்­பாக சமூ­கத்­தி­லுள்ள உல­மாக்கள் புத்­தி­ஜீ­விகள் இதற்­காக முன்­வர வேண்டும். 

பாரா­ளு­மன்­றத்தில் உள்ள ஒரு பிர­தி­நி­தியின் உரை பய­னுள்­ள­தா­கவும் தாக்­கம்­மிக்­க­தாவும் அமை­வ­தற்கு அதில் நம்­ப­க­ர­மான தக­வல்கள் புள்ளி விப­ரங்கள் உள்­ள­டங்­கி­யி­ருப்­பது அவ­சி­ய­மாகும். அப்­ப­டி­யாயின் அத்­த­கைய தக­வல்­களை  அவர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு முஸ்லிம் சமூ­கத்தில் ஒரு தகவல் களஞ்­சியம் இயங்க வேண்டும். அதி நவீன தொழில்­நுட்­பங்கள் ஆய்வு முறைகள் தகு­தி­யான ஆய்­வா­ளர்கள் அதில் உள்­வாங்­கப்­பட்டு பாரா­ளு­மன்ற உறு­ப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் தேவை.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மன்றம்

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது மன்றம் ஒன்று உரு­வாக்­கப்­பட்டு அதில் கட்சி பேத­மின்றி சகல பிர­தி­நி­தி­களும் உள்­வாங்­கப்­பட்டு அவர்­க­ளுக்­கான கிர­ம­மான சந்­திப்­புக்கள், கலந்­து­ரை­யா­டல்கள் பயிற்சித் திட்­டங்கள், ஆத்­மீக ரீதியான வழிகாட்டல்கள் இடம்பெற வேண்டும். இந்த மன்றத்தை தேசிய சூரா சபை போன்ற ஒரு பொதுவான அமைப்பு ஒழுங்கு செய்யலாமே என ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். அது சிறந்த ஓர் அபிப்பிராயமாக இருந்தாலும் அதனை எந்த அளவு சாத்தியப்படுத்தலாம் என்பது பற்றி சிந்திப்பது அவசியமாகும். ஆனால் அது மிகவும் அவசியமான காலத்தின் தேவை என்பதில் இரு கருத்துக்கு இடமிருக்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தில் தீர்க்கப்பட வேண்டிய ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய பிரதானமாக ஏழு துறைகள் உள்னள. 

1) ஆத்மீகமும் பண்பாடும் 2) அரசியல்  3) கல்வி 4) வெகுஜன தொடர்பு சாதனத் துறை  5) சுகாதாரம்  6) குடும்ப உறவுகள்  7) பிற சமூகங்களுடனான சமாதான சக வாழ்வு.

இவற்றில் ஒரு துறையாக மட்டுமே அரசியல் இருந்தாலும் ஏனைய ஆறு துறைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக அது இருப்பது கண்கூடு. எனவே அரசியல் துறையையும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களையும் பற்றிய சரியான நிலைப்பாடுகளை நாம் எடுப்பதற்கான சந்தர்ப்பமாக இந்த தேர்தலுக்குப் பிந்திய சூழலை நாம் பயன்படுத்திக் கொள்வோமாக.

Reactive ஆக அதாவது பிரச்சினைகள் தோன்றியதற்குப் பின்னர் தீர்வுகளைத் தேடுவது பற்றி சிந்திப்பதனை விட Proactive எனப்படும் பிரச்சினைகள்  உருவாகாமல் இருப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் அதிக முயற்சிகளை எடுப்போமாக.

 வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக!

1 comment:

  1. எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பொருத்தவரை மாற்றுமத சகோதரர்களுடன் நல்ல உறவை பேணி வருகின்றார்கள் .எனவே இவ்வாறான மன்றம் ஆரம்பிக்கப்பட்டால் அதன் மூலம் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் வேலைத்திட்டங்களை நெறிப்படுத்தி வைப்பதனால் நல்ல பல மாற்றங்களை நாம் காண முடியும் .
    இது தான் மாற்றத்திகான இலகுவான வழிமுறையாகும் .

    ReplyDelete

Powered by Blogger.