Header Ads



50 கோடி ருபாய்களை, மீதப்படுத்திய மகிந்த

தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட செலவில் 50 கோடி ரூபா செலவிடப்படவில்லை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடந்த 17ம் திகதி நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான மொத்த செலவுகள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தலுக்காக மொத்தமாக 400 கோடி ரூபா பணம் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் தேர்தல் நிறைவின் போது மொத்தச் செலவு 350 கோடி ரூபாவாகவே காணப்பட்டது.

சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களை அகற்றுவதற்காக பொலிஸார் கோரியிருந்த தொகையைக் கூட குறைக்க முடிந்தது.

இந்த தடவை தேர்தலின் போது சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட் பயன்பாடு வெகுவாக வரையறுக்கப்பட்டது.

தேர்தல் செலவுகள் குறைவடைவதற்கு இதுவும் ஓர் முக்கிய காரணியாக அமைந்தது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.