முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்கு, உலமா கட்சியே காரணம் - அடித்துக்கூறும் முபாரக் மௌலவி
கல்முனைக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்ட எடுக்கப்பட்ட சதிகளை முறியடித்து முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் வென்றெடுத்த கல்முனை மற்றும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் போற்றுதலுக்குரியவர்கள் என உலமா கட்சித் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்தார்.
நடந்து முடிந்த தேர்தல் பற்றி அவர் மேலும் குறிப்பிடும்போது,
கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இப்பகுதியில் இருந்தவர்கள் மீது பாரிய அதிருப்தி மக்களிடம் இருந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதனை நீக்கி தமது இறைமையையும், தன்மானத்தையும் காத்து சுயமான காலில் நின்று கொண்டு பரந்து பட்ட சேவையை பெறுவதாயின் கல்முனை தலைமையிலான கட்சியை பலப்படுத்துவதன் மூலமே முடியும் என்பதே எமது கட்சியின் உறுதியான கொள்கையாகும்.
இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை அம்பாரை மாவட்டத்தில் ஆதரிப்பது என தீர்மானித்ததற்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன. மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான கட்ச்pக்கு ஆதரவு பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு என்ற எமது நிலைப்பாடு பலருக்கு முரண்பட்டதாக தெரிந்தாலும் அரசியல் வரலாற்றில் ஒரு புதுமையை ஏற்படுத்தி காட்டியுள்ளோம்.
எமது இந்த ஆதரவு காரணமாக பலரும் எம்மை கடுமையாக விமர்சித்தனர். தோற்கப்போபவர்களுக்கா உங்கள் ஆதரவு என கேட்டனர். நாம் ஆதரவு தருபவர் தோற்பார் என்றும் கிண்டலடித்தனர். இவை அத்தனையையும் தாங்கிக்கொண்டு நாம் மக்களுக்கு பகிரங்கமாக விளக்கமளித்தோம்.
கடந்த காலங்களை விட மக்கள் இம்முறை ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் காங்கிரசின் வேற்பாளர்களுக்கு வாக்களித்துள்ளமைக்கு பிரதான காரணம் உலமா கட்சியின் ஆதரவு என்பதை யாரும் மறுக்க முடியாது. முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்த உலமா கட்சியே அதன் வேட்பாளர்களை ஆதரிக்கும் போது தாம் எம்மாத்திரம் என தளம்பல் நிலையிலிருந்த மு. கா வின் வேட்பாளர்களை சிந்திக்க வைத்ததும் நாமே.
இதனை சரியாக புரிந்து கொண்ட அம்பாரை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களுக்கு உலமா கட்சி தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என முபாறக் மௌளலவி தெரிவித்துள்ளதோடு தெரிவு செய்யப்பட்ட மூன்று வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக முபாறக் மௌலவி தெரிவித்தார்.

சேர்,நகைச்சுவைகளை செய்தித்தலைப்பாக போடவேண்டாம்,கோமாளிகளும் கூஜாத்தூக்கிகளும் அவரவர் வேலைகளை நன்றாகவே செய்துகொண்டிருக்கின்றனர். மக்களுக்கு நன்றாக புலனங்கன்கள் இயங்குகின்றபோது,புலன்களை அடகுவைத்தவர்கள் கூப்பாடு போடுகின்றார்கள்,வெற்றியில் நாமும் பங்காளிகள் என்று
ReplyDeleteபைத்தியம் முத்திட்டு போல
ReplyDeleteஅடடே இது நல்லா இருக்கே
ReplyDeleteBuddhist people have rejected religious based racist parties. It is our duty to kick these religious based Muslim parties from our side. People who cannot adapt into Islamic culture wanted form Ulama Party?
ReplyDeleteYes may be ulamaa katchi recited Hayaath nabi paathyaa day and night!
ReplyDeleteInthe kosuth tholle thaange mudiyele.. Eanpa mailevi ungeluku manesaatsiye illeya..
ReplyDeleteOver Allah than maranthu vittu pesuraaru putalam makal baisku vote pods solo vittu ippa saibaba Madrid talk
ReplyDeleteஇந்தாள் ஒரு பிரக்கில்லாத ஆள் சம்மந்தமில்லாத அறிக்கைகளை விடுவது.
ReplyDelete