Header Ads



இலங்கையில் முதன்முதலாக வேற்று கிரகவாசிகள், தொடர்பான சர்வதேச மாநாடு

வேற்று கிரகவாசிகளின் வருகை தொடர்பான விசேட சர்வதேச மாநாடு ஒன்று இலங்கையில் நாளை முதல் நடைபெறவுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அத்துல சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு இந்த மாநாடு நடைபெறும்.

இதில் வேற்று கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், நிபுணர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் போது, அண்மைக்காலமாக அரலகங்வில உள்ளிட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட வேற்றுக் கிரகத்துடன் தொடர்புடைய வஸ்த்துக்கள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.