தேசிய அரசாங்கத்தை கைவிட்டு, தனித்து ஆட்சியமைக்கதயார் - கபீர் ஹாசிம் அதிரடி
அமைச்சுப் பதவிகளை பகிர்வதில் இழுபறி நிலைமை தலைதூக்கியுள்ளதால் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையேயான தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம், எதிர்க்கட்சி விரும்பாவிட்டால் தேசிய அரசாங்க யோசனையைக் கைவிட்டு தனித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்கதயார் என்றும் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு இந்த விடயத்தில் உரிய தீர்வை காண்பார் என்ற நம் பிக்கை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை ஏற்கும் நிகழ்வு இன்று இடம்பெற மாட்டாது.இந்நிகழ்வு மேலும் காலதாமதமாகும் நிலைமை தலைதூக்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவுடன் பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமையவும், ஜனாதிபதிக்கு மதிப்பளித்துமே ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசு அமைக்க விருப்பம் தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், மேற்கண்ட இணக்கப்பாட்டிற்கு அமையவே சுதந்திரக் கட்சியுடன் இரண்டு வருடங்களுக்கான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
ஆனால் இன்று அதிகளவில் அமைச்சர் பதவிகள் தமக்கு வழங்கப்பட வேண்டுமென்று சுதந்திரக் கட்சியினர் கோருகின்றனர். இக் கோரிக்கை அநீதியான கோரிக்கையாகும். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 107 ஆசனங்கள் கிடைத்துள்ளன. எனவே எமக்கு இன்னமும் ஆட்சியமைக்க 6 பேரின ஆதரவே தேவைப்படுகின்றது. ஆனால் தற்போது 25 பேர் எம்முடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் எதிர் கட்சியினர் எம்முடன் இணைந்தது தேசிய அரசை ஏற்படுத்த விரும்பாவிட்டால் நாம் எமக்குள்ள 107 ஆசனங்களுடன் எமக்கு ஆதரவு வழங்குவோரை இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்க தயாராகவுள்ளோம்.
அதிக ஆசனங்களை ஐக்கிய தேசிய முன்னணி பெற்றுள்ள நிலையில் எப்படி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிக அமைச்சுப் பதவிகளை வழங்க முடியும்? அவ்வாறு கோருவது நியாயமற்றதாகும். இதற்கு இணங்கவும் முடியாது. எனவே எமது பாதையில் நாம் தனித்து பயணிக்கலாம்.
அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதில் இரு தரப்பிலும் இழுபறி நிலை தலைதூக்கியுள்ளது. எனவே இன்றைய தினம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளும் நிகழ்வு இடம்பெறாது. அது கால தாமதமாகும்.
கடந்த 1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களில் 105, 106, 107 ஆசனங்கள் பெறப்பட்டன. எனவே தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை. 2001 ஆம் ஆண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சி 104 ஆசனங்களையே பெற்றது. 2010 ஆம் ஆண்டில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 140 பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றார்.
அதன் பின்னர் இன்று 2015 இல் இடம்பெற்ற தேர்தலில் எமக்கு 107 ஆசனங்கள் கிடைத்தள்ளன. ஆட்சியமைக்க ஆறுபேரின் ஆதரவே தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

தனித்து ஆட்சி அமைப்பதே சிறந்த முறை.மக்கள் ஐக்கிய முன்னணியில் உள்ள குழப்பவாதிகள் இருக்கும் வரையும் நல்லாட்சி நடக்க விடமாட்டார்கள்.பத்து வருடம் திண்டு கண்ட கள்ளக்கூட்டம்
ReplyDeleteKABEER HASHIM IS RIGHT
ReplyDeleteYes, mr kabeer hashim.
DeleteYour right.
Ranil will fail this time if he agrees to accommodate those UPFA losers to the Cabinet Ministers.......................
ReplyDelete