டிலான் பெரேரா சொல்லும் 'பட்டர்' கேக் + 'ஐசிங்' கதை...!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோல்விக்கு மஹிந்த ராஜபக் ஷவும், முன்னணியின் கட்சித் தலைவர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுமே பொறுப்பேற்க வேண்டுமென குற்றம் சாட்டியுள்ள சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா,
“பட்டர்” கேக்கைத் தயாரித்த ஐ.ம.சு.மு. ஜனாதிபதியிடமிருந்து “ஐசிங்”கை பெற்றுக் கொள்ளவில்லை. எனவே தோல்விக்கு ஜனாதிபதி பொறுப்பல்ல என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்திருப்பதாவது.
மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடாமல் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டிருக்கலாம். அவர் குருநாகலை தேர்ந்தெடுத்தது பிழையாகும்.
கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட பிரசன்ன ரணதுங்க ஐ.ம.சு.மு.வில் மஹிந்த - மைத்திரி அணியென்ற பிரிவினையை ஏற்படுத்தி முன்னணியை பின்னடையச் செய்துவிட்டார்.
இவ்வாறானதொரு நிலையில் மஹிந்த கம்பஹாவில் போட்டியிட்டிருக்கலாம். “பட்டர்” கேக்கை தயரித்த ஐ.ம.சு.மு. ஜனாதிபதி மைத்திரிபாலவிடமிருந்து “ஐசிங்”கை பெற்றுக் கொள்ளவில்லை. இதுவே தோல்விக்குக் காரணமாகும்.
எனவே தோல்விக்கு ஜனாதிபதி பொறுப்பல்ல. மஹிந்தவும், முன்னணியின் கட்சித் தலைவர்களும், சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுமே தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பதாகவே மஹிந்தவை போட்டியிட வேண்டாம். சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் கிடைக்காது என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார். ஆனால் அதற்கு செவிசாய்க்கப்படவில்லை.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐ.ம.சு. மு.வோ, ஐ.தே.க.வோ பெரும்பான்மை வெற்றி பெறவில்லை. எனவே இரு தரப்பினரும் ஆட்சியமைக்க முடியாது. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலேயே ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.
இன்று அவ்வாறானதொரு ஆட்சியே ஏற்படுத்தப் படவுள்ளது. எனவே இதனை தேசிய அரசாங்கம் எனக் கூறமுடியாது.
நாட்டின் தேசிய பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து ஏற்படுத்தப்படுவதே தேசிய அரசாகும். எனவே இவ் அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அதிக ஆசனங்கள் கிடைத்திருந்தால் அதற்கே எதிர்க்கட்சி தலைமை வழங்கப்பட வேண்டும்.
இதனை இனவாத ரீதியாக நோக்கக்கூடாது என்றும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இப்பதான் உங்களுக்கு புரிகிறது.இன்னும் எவ்வலவோ இருக்கு நீங்கள் புரிவதற்கு.
ReplyDeleteYou are the real baker....!...haha you dont know this before..?
ReplyDeleteyou are real jocker now a days.....