'சுசில் பிரேமஜயந்தவின், தனிப்பட்ட கவலை இது..'
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியலுக்கு அதன் பங்காளி கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தமது தனிப்பட்ட கவலையை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் இடம்பெறவிருந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கிடைக்க பெற்ற நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த செயற்பாடுகள் இடம் பெற்றதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கூட்டமைப்பிற்கு வாக்களித்து 95 ஆசனங்களை பெற செய்த மக்களுக்கு நன்றியினை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விபரம் நேற்று வெளியானது.
இதில், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த 7 பேரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்ட பட்டியலில் ஐந்து பேர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த விஜித் விஜயமுனி சொய்சா, எஸ்.பீ திசாநாயக்க, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன, திலங்க சுமதிபால, அங்கஜன் ராமநாதன், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, சரத் அமுனுகம, டிலான் பெரேரா, மலித் ஜயதிலக, பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம் பௌசி ஆகியோரும் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தேசிய பட்டியலில் முன்னர் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல்.பீரிஸ், டிவ் குணசேகர, திஸ்ஸ விதாரன, திஸ்ஸ அத்தநாயக்க, ரெஜினோல்ட் குரே, ஜீவன் குமாரனதுங்க, டிரான் அலஸ், ரஜீவ விஜேசிங்க ஆகியோர் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டிருக்காமை விஷேட அம்சமாகும்.
ஐக்கிய தேசிய கட்சி, தேசிய பட்டியலுக்காக நியமிக்கப்பட்ட 13 உறுப்பினர்களது பெயர் விபரங்களை நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பியிருந்தது.

Yaru enna sonnalum SL.oru Malaysia Singapore avthu kadinam makal 50% madmail kollai kootathuku vote pannuhiragal JVP appavi ellorum edit paarthathu insha Allah next Muslim JVP vote pannum nilamai varalam Mr.ranil sure illath sithiram
ReplyDelete