UNP + UPFA தேசிய அரசாங்கம், இதுவரை எட்டப்பட்ட இணக்கப்பாடுகள்
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிகளுக்கிடையே தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான மற்றுமொரு கட்ட பேச்சுவார்தை இன்று (22) இடம் பெற்றது.
இதன்போது, அமைச்சர் பதவி, பகிர்வுகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக சுதந்திர கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான யோசனைகள் சில முன்னதாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, அமைச்சர் பதவிகளில் 45 சதவீதமானவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், 55 சதவீதமான அமைச்சு பதவிகள் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பகிரப்பட வேண்டும் என அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள 15 அல்லது 17 அமைச்சுக்களை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு வழங்க இரண்டு தரப்பினருக்கிடையே இணக்கம் ஏற்பட்டதாக கலந்துரையாடலில் பங்கேற்ற சுதந்திர கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 19வது அரசியலமைப்பு சீர்த்திருத்திற்கு அமைய அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக hiru செய்தி பிரிவு ஜனாதிபதியின் சட்ட ஆலோசகரான ஜயம்பதி விக்ரமரத்னவிடம் தொடர்பு கொண்டு வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களை அதிகரிக்க வேண்டுமாயின் நாடாளுமன்றின் அனுமதியை பெற்று கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

Post a Comment