Header Ads



தேசியப் பட்டியலுக்கான மோதல் - முஸ்லிம் கட்சித் தலைவர்கள் திண்டாட்டம்

நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் தேசியப்பட்டியல் ஊடாக நியமனம் பெற்றுக் கொள்வதில் நாட்டம் கொண்டுள்ளனர்.

எஸ்.பி.திசாநாயக்க, நந்திமித்ர ஏக்கநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, மஹிந்த சமரசிங்க ஆகியோரே அவ்வாறு தேசியப்பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சிக்குள் தனது கையை பலப்படுத்த மேற்குறித்த நால்வருடன் சோலங்க ஆராச்சிக்கும் தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜே.வி.யின் லால்காந்த, சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரும் தேசியப் பட்யடில் ஊடாக மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை பெறக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் ஆகியோரிடம் தமக்கு பிரதிநிதித்துவம்வழங்கபட வேண்டுமென தெரிவித்த புல நூற்றுக்கணக்கானவர்கள் அவர்களுடைய வீடுகளுக்கு முன் திரண்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இதனால் அவர்கள் யாருக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்குவதென அறியாமல் திண்டாடுவதாகவும் கூறப்படுகிறது.

5 comments:

  1. S L M C . HASAN ALI , ? ,

    ReplyDelete
  2. They shouldn't select anyone who has been defeated by the people. If they do then they doing against the will of the people.

    Please do not take anyone who has been rejected by the people in this election.

    ReplyDelete
  3. Should be given to Hasan Ali because he is the secretary of SLMC no need any qualifications that is very important post so MP post should be needed

    ReplyDelete
  4. Hassan Ali & Addalichanai naseer.

    ReplyDelete

Powered by Blogger.