Header Ads



மகிந்த ராஜபக்ஸ என்ற பகடைக்காய் - ஜீவன் குமாரதுங்க வேதனை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் பயன்படுத்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லாதவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிக் கொண்டதாக முன்னாள் அமைச்சரும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மொரட்டுவை அமைப்பாளருமான ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று மொரட்டுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால அரசியல் சூழ்நிலை எமக்கு சாதகமாக அமையவில்லை. ஓர் புயலை உருவாக்கித் தரப்பினர் அந்த காற்றில் தொங்கி தங்களது சுயலாப நோக்கங்களை பூர்த்தி செய்து கொண்டனர்.

தங்களது சுயலாப நோக்கங்களை அடைந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே கொழும்பு மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியின் ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றியீட்டியுள்ளார். சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சி ஆதரவாளர்கள் மறந்து போகும் வகையில் இவர்கள் செயற்பட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் இறுதி முடிவுகளின் போது தெரிந்தோ தெரியாமலோ கட்சியின் பலத்தை நாமே நீர்த்துப் போகச் செய்துள்ளோம்.

மஹிந்த ராஜபக்சவின் ஆசீர்வாதத்துடன் செயற்பட்ட தரப்பினரே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாரியளவில் அநீதி இழைத்துள்ளார்கள் என ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. UPFA politicians used mahinda to get votes but no one loved mahinda. last nail of MRs coffin will be put on the day UNP take charge of the parliament.

    ReplyDelete
  2. Your bus gone already my friend...

    ReplyDelete

Powered by Blogger.