மைத்திரி பதவி விலகவேண்டும் - முன்னாள் பிரதமரின் மகன் போர்க்கொடி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் பதவியில் இருந்து உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஹொரண பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது கட்சி தோல்வியடைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றால் அவருடைய மாவட்டமான பொலநறுவையும் தோல்வியடையும்.
எனவே அவர் உடனடியாக தனது கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்துகொள்ள வேண்டும் என விதுர விக்ரமநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Shut up...!
ReplyDeleteஆத்தாத நாய் சூ...... கடிக்கிரயாம்
ReplyDelete