மைத்திரி, மகிந்த நேற்றிரவு மீண்டும் சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) இரவு விஜேராமையில் அமைந்துள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டவை தொடர்பில் ஒரு சில தகவல் மாத்திரம் தற்போது வெளியாகியுள்ளன.
மிக சுமுகமாக இடம்பெற்ற இச்சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்சவின் எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்கால அரசியல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வினவிய போது,
கட்சியின் தலைவர் ஜனாதிபதி என்பதனால் தன் எதிர்கால அரசியல் தொடர்பில் தீர்மானம் மேற்கெள்ளும் பொறுப்பினை அவரிடம் ஒப்படைப்பதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.
அங்கு ராஜபக்சவின் அரசியல் பயணம் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளாத நிலையில் ஒன்றரை மணித்தியாளம் மிகவும் சுமுகமாக கலந்துரையாடலாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ohoma thamai. daam wenawa. doom wenawa. dan okkoma wela iwarai. take rest MR.
ReplyDeleteமனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள் இந்த விடயத்தை தெருந்து வைத்துக்கொண்டுதான் மஹிந்த இவ்வாறு அடிக்கடி மைத்திரியை சந்திப்பது.ஒருவரை அடிக்கடி சந்தித்து கெஞ்சும் போது மனம் இறக்கப்படக்கூடும் ,அவ்வாறான ஒரு நம்பிக்கையில்தான் மஹிந்தையின் நடவடிக்கைகள் அமைத்துள்ளது.இந்த கெஞ்சலுக்கும் அடிபநிவுக்கும் மைத்திரி பாவம் பார்த்தால் எதிர்காலத்தில் அவருக்கு பாவம் என்று சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை மைத்திரி இப்போதே தெரிந்துகொள்ள வேண்டும்.இந்த மஹிந்தையை சந்திப்பதை சம்பூர்ணமாக தவிர்க்க வேண்டும்.ஜனாதிபதி இரண்டு தோனியில் கால் வைத்தவண்ட கதையாக உள்ளது.ஜனாதிபதி அவர்களே மகிந்தின் கயிறு தும்புக்கயிறல்ல அது கம்பிக்கயிறு விழுங்கினால் விழிய எடுக்க முடியாது.அவ்வளவுதான்.
ReplyDeleteDukwenawa,rajawenawa,baluwenawa...
ReplyDelete