Header Ads



பாராளுமன்றத்திற்கு தெரிவான, புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சிநெறி ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த பயிற்சி நெறிகள் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பொது செயலாளரின் அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 வது நாடாளுமன்றத்திற்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக முழுமையாக வெளியிடப்படாதமையே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்குவதற்கு எதிர்வரும் 23. 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்திற்கு பிரசன்னமாகும் படி புதியதாக தெரிவானவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், அந்த நடவடிக்கைள் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் முற்பகல் 9.30 தொடக்கம் பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெறும் என நாடாளுமன்ற பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தினங்களில் தேசிய அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை எடுத்து வருமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.