Header Ads



தேசியப் பட்டியல் பெயர்களை 26 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும்

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதான கட்சிகளின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான பெயர்கள் இதுவரை தேர்தல்கள் செயலகத்திற்கு வழங்கப்படவில்லை.

தேசியப் பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக நியமிக்கப்படும் பிரதிநிதிகளின் பெயர்களை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டுமென தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்ப்பைப் பெற்றுள்ள கட்சிகளிடம் அதற்கான பெயர் விபரங்களை அனுப்பிவைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறினார்.

பாராளுமன்றத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இன்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.