தேர்தலில் போட்டியிட்டவர்களின் 49,96,000 ரூபாய் பணம் அரசுடமையாக்கப்பட்டது
நடைபெற்ற 8வது பாராளுமன்றத் தேர்தலில், சுயேட்சைக் குழுக்களில் போட்டியிட்டவர்களால் பிணையாக வைக்கப்பட்ட 49,96,000 ரூபாய் பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட், 2498 வேட்பாளர்களின் பிணைப் பணம் இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் 201 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் அதிகமான சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Post a Comment