Header Ads



ஒரு வருடத்திற்குள், மீண்டும் ஆட்சியை கைபற்றுவோம் - மனுச நாணயக்கார

நாம் இன்னமும் ஒரு ஆண்டு காலத்திற்கு மட்டுமே எதிர்க்கட்சியில் இருப்போம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட வேட்பாளர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஓராண்டு காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும்.

மஹிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என கூறப்பட்டது. அவர் தோல்வியடைவார் என கூறப்பட்டது. இவ்வாறு செய்யக் கூடிய சகல விளையாட்டுக்களையும் செய்தும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கணிசமான வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஈட்டப்பட்ட இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கின்றது. உண்மையில் எமக்கு பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருக்க முடியும்.

இறுதி நேரத்தில் எமது சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டமைப்பின் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 13 பேர் நீக்கப்பட்டு,  எமது தேர்தல் நடவடிக்கைகள் குழப்பப்பட்டன. இதனால் மிதக்கும் வாக்குகள் எம்மை விட்டு விலகிச் சென்றன.

எனினும் மஹிந்த ஐயாவை நேசிப்பவர்களை காலி மாவட்ட மக்கள் தெரிவு செய்துள்ளனர், அது மகிழ்ச்சியளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணும் நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சற்று முன்னர் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மனுச நாணயக்கார இம்முறை தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. உங்கள் தலையை அவசரமாக ஒரு ENT டாக்டரிடம் காட்டி சிகிச்சை பெற்றால் நல்லது. இன்னும் முற்றிவிட்டால் இன்னும் எதை எதையோ பேசுவீர்களோ தெரியாது.

    ReplyDelete
  2. So, you will go to Jail after one year...?
    Dont think that this is not ur regime...and you can not buy the MPs by chinese money...dont make the public foolish...anyway..you people already lost, we have saved the country......Thank God

    ReplyDelete
  3. It might be an abnormal case

    ReplyDelete
  4. விலுந்ததான் மீசையில் மண் படவில்லை என்று சொல்லுகிறார் மடையர் சங்க தலைவர்.

    ReplyDelete

Powered by Blogger.