Header Ads



மகிந்த அமைதியடைவாரா...?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய அரசாங்கத்துடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளாதிருக்கத் தீர்மானித்துள்ளார்.

அத்துடன் தேசியப் பட்டியல் மற்றும் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால எடுக்கும் முடிவுகளை விமர்சிக்காமல் அமைதியாக இருப்பதற்கும் அவர் தீர்மானித்துள்ளார்.

மஹிந்தவின் சகோதரர்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இதற்கான ஆலோசனைகளை வழங்கி மஹிந்தவை சம்மதிக்க வைத்துள்ளனர்.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினராக செயற்படத் தீர்மானித்துள்ள மஹிந்த, எதிர்க்க்ட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளமாலிருக்கத் தீர்மானித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது நெருக்கமான சகாக்கள் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் அறியப்படுத்தியுள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

4 comments:

  1. பழைய பைல்கள் துுசி தட்டப்பட்டு மீள புரட்டப்பட நேரமாகிவிட்டதனால் இவன் தானாகவே அடக்கிவாசிக்க வைக்கப்பட்டுள்ளான்

    மௌனம் சம்மதத்திற்கான அறிகுறியே
    ஆதலால் எதிர்பார்த்திருக்கலாம் இந்தப் பூனைக்கு மணி கட்டப்படுகிறதா? அல்லது இருகரங்களையும் சேர்த்து சங்கிலி இடப்படுகிறதா? என்று அறிந்து கொள்ளலாம்

    ReplyDelete
  2. வெட்கம் இல்லாமல் பின் வருசையில் அமர்ந்து இருக்க போறாரு.ஆனால் கொஞ்ச நானக்குத்தான் அவர் பார்லிமெண்டில் இருப்பார் அதன் பின் அவருக்கு எதிரான வழக்குகளில் மாட்டி பதவிகள் எல்லாம் பறிக்கப்பட்டு பிரஜா உரிமையும் பறிக்கப்படலாம்.வரும் அரசாங்கம் மஹிந்தைக்கு இளிச்ச வாயனாக இருந்தால்.ஓரிரு வருடங்களில் பார்லிமென்ட் கலையும் வாய்ப்பு ஏற்ப்படும்.மஹிந்தைக்கும் மஹிந்தட குடும்பத்துக்கும் அவர்களின் அடியாட்களுக்கும் எடுக்கும் கடுமையான நடவடிக்கையின் காரணமாக பிச்ச வாணாம் நாயப்பிடி என்று ஓடவேண்டும்.

    ReplyDelete
  3. அப்பனும் மகனும் ஒரே சால்வையைச் சுற்றிக்கொண்டு இறுதிவரிசையில் பேசிக்கொண்டிருப்பதைக் காண ஆசையாக இருக்கின்றது.

    அதெல்லாம் இருக்கட்டும் சும்மா நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காமல் புதிய பாராளுமன்றத்தில் திரு. அநுரகுமார தொடுக்கப்போகும் கேள்விகளுக்கு பதில்களை ஆயத்தப்படுத்துங்கள்.

    ReplyDelete
  4. Ex President Sir, people want you to rest,so you have been sent home!

    ReplyDelete

Powered by Blogger.