ஹெலிகொப்டர் பயணத்தில், உயிர்தப்பிய ரவூப் ஹக்கீம் (படங்கள்)
-M.I.Mubarak-
ஒரு தேசிய கட்சியின் தலைவன் என்ற அடிப்படையிலும் தான் அதிகமாகக் களத்தில் குதித்தால்தான் இந்தக் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலும் தேர்தல் காலத்தில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அபாரமானவை-ஆபத்தானவை..
தேர்தல் காலத்தில் அவருடன் இருந்து கட்சியின் ஊடகத்தை நெறிப்படுத்தி அதை முன்னெடுத்துச் சென்றவன் என்ற வகையில், பல உண்மைகளை நான் அறிவேன்.
கட்சியைக் காப்பாற்றுவதற்காக அவர் எவ்வாறெல்லாம் பாடுபட்டார்; எவ்வாறான உயிர் ஆபத்துகளை எதிர்கொண்டார் என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் எதிர்கொண்ட ஓர் ஆபத்தான சம்பவத்தை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
பல இடங்களில் கட்சி வீழ்ச்சியடைந்து காணப்பட்டதால் அந்த இடங்களுக்கு அதிகம் செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு. தேர்தலுக்கான காலமும் குறுகியே காணப்பட்டதால் அனைத்து இடங்களுக்கும் விரைவாகச் சென்று வருவதற்கு அவர் பயன்படுத்தியது சிறிய ரக ஹெலிகொப்டரையே.
அந்தப் பயணங்கள் அவருக்கு சௌகரீகமாக இருக்கவில்லை என்பது அந்தப் பயணத்தின்போது அவருடன் இருந்தவர்களுக்கு மாத்திரம்தான் தெரியும்.
புத்தளத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹக்கீம் நண்பகல் 12 மணிக்கு கொழும்பில் இருந்து புத்தளத்திற்கு ஹெலிகொப்டர்மூலம் புறப்பட்டுச் சென்றார்.
அதேநேரம், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரசிங்கவும் வேறு ஹெலியில் சென்றார். இதனால், ஹக்கீம் சென்ற ஹெலியின் சமிஞ்சையில் கோளாறு ஏற்படத் தொடங்கியது.
அந்த விமானத்தின் சமிஞ்சை கட்டுநாயக்க சார்வதேச விமான நிலையத்தில் உள்ள ராடாரில் படவில்லை. இதனால், ஹெலி திசை மாறத் தொடங்கியது.
2000 அடி உயரத்தில் பறக்க வேண்டிய ஹெலி 5000 அடி வரை மேலே எழுந்தது; தடுமாறத் தொடங்கியது.கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியது. ஹெலியின் கெப்டன் அதைக் கீழே இறக்குவதற்காகப் போராடினார்.
அப்போது அந்த ஹெலி மரணத்தின் விளிம்பைத் தொட்டுக் கொண்டிருந்தது. உள்ளே இருந்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று உங்களுக்குச் சொல்லத் தேவை இல்லை.
பலத்த போராட்டத்தின் பிறகு ஒருவாறு ஹெலி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உரிய இடத்தில் இறக்கப்பட்டது.
இதைப்போல்,மற்றுமொரு சம்பவமும் இதைத் தொடர்ந்து இடம்பெற்றது.
கண்டி ரங்கலையில் பிரசாரக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் கலந்துகொள்வதற்காக அதே ஹெலியில் சென்றார் ஹக்கீம்.
ரங்கலை இந்துக் கல்லூரி மைதானத்தில் அது இறங்குவதாக இருந்தது. மலைகள் நிறைந்த இடமாக இருந்ததால் அந்த மைதானத்தைக் கண்டு பிடிப்பது ஹெலியின் கெப்டனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.
அந்த மைதானத்தைத் தேடி சுமார் 40 நிமிடங்கள் ஹெலி வானில் வட்டமிட்டது. இறுதியில் முடியாமலே போனது. பிறகு,கண்டி தெல்தெனிய மைதானத்தில் தரை இறக்கப்பட்டது.
இவ்வாறு மிகவும் ஆபத்தான பயணங்களாக ஹக்கீமின் ஹெலிகொப்டர் பயணங்கள் அமைந்திருந்தன.
கட்சியைக் காப்பற்றுவதற்காக அவர் எவ்வாறு உயிரைக் கொடுத்துப் போராடினார் என்பதை இதன்மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
இந்தச் சம்பவங்களுக்குப் பிறகும் அவர் துணிச்சலுடன் ஹெலிகொப்டர் பயணங்களைத் தொடர்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் .
ReplyDeleteBig Joke! very much funny. Only stupids believe, definitely, I am not one of them. Another political insanity.
ReplyDeletePoli tricks
ReplyDeleteNot to worry too much about him. He is not a muslim leader anymore. He is out. He is a person of hypocrisy. I ever seen a person like him in my life. A person with number of tungs. Take it easy and who cares.
ReplyDeleteதெறிந்தும் ஏன் அதே ஹெலியில் போக வேண்டும். பசாங்கு காட்டுகிறார் மக்களுக்கு...
ReplyDeleteAllah knows how to serve him and our umma(islam)
ReplyDeleteAameen
ReplyDeleteFor his efforts he is getting a MINISTERIAL JOB and proposing his Brother to National List.
ReplyDeleteதலைவா உம்மை இறைவன் பாதுகாப்பான்
ReplyDeleteAllah helps him
ReplyDeletewho paid for these helicopter trips.. remember all made lot of fuss about MPs of last government using helicopters at government expense. So the writer being a close confident should make a small not about the funding sources of the trips also.
ReplyDeleteஅவர் உயிரை மாய்த்து கட்சியை பாதுகாப்பதில் கிழக்கு மாகாண மக்களுக்கு தான் பயநுள்ளதே தவிர மற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு சேவையும் நடக்க அவர்கள் விடுவதும் இல்லை மேலும் இதனால் கட்சியை வளர்த்த பாடும் இல்லை முஸ்லீம் மக்களது தேவை நிறவேறியதும் இல்லை. கடைசியாக ஒரு நல்ல மனிதரை நாம் இழந்தது தான் மிச்சமாகும்
ReplyDeleteDo u think he will visit this place normal days after this election? Iam sure the next visit this place is on next year for the next election .did u forget how he came to Dambulla when some buddies try to demolishe the masjid. remember one video explain of his drama in Gampola .
ReplyDeleteEanna aatharam
ReplyDeleteMahhalai poi solli eamatra vendam
கட்சியின் வீழ்ச்சிக்கும் அவர் தானே காரணம்... இன்னும் அவரது இந்த முயற்சியும் போராட்டமும் அவரது பதவி மோகமே தவிர சமூகத்தின் மீது கொண்ட பற்றினால் அல்ல.. இந்த சமூகம் அவரை அடையாளம் கண்டுவிட்டது.
ReplyDeleteமர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்களின் விபத்துபற்றிய சந்தேகங்கள் தேர்தல் காலங்களில் சமூகவலைதலங்கள் மூலம் ஹக்கீமை சந்தேகப்படும்படியாக கேள்விகள் கேட்க்கபட்டு இருந்தது. அதற்க்கு சரியான முறையில் பதிலளிக்காமல் அதனை திசை திருப்புவதுபோல் இச்செய்தி அமைந்திருக்கிறது.
ReplyDelete.மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்கள் மரணித்து 15 அவருடங்களுக்கு மேலாகியும் அவர் திடீர் மரணம்பற்றி விசாரணைகள் ஏதும் நடைபெறாதது ஏன் ?
.மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்கள் பயணம் செய்த விமானத்தின் கருப்பு பெட்டிக்கு நடந்தது என்ன?
இதற்க்கு முன்னர் இரண்டு ஜனாதிபதிகள் ஆட்சியிலும் ஒரு பிரதம மந்திரி ஆட்சியிலும் முக்கிய அமைச்சுகளை வகித்திருந்த ஹக்கீம். மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்கள் மரணம் தொடர்பான சந்தேகங்களை பாராளுமன்றத்தில் வாய்திறந்து கேட்காது மௌனியாய் இருப்பதன் காரணம் என்ன?
பதில் தருவாரா ஹக்கீம்.
காய்த்த மரம்மீதுதான் கல் அடிகள் அதிகம் விழும்.
ReplyDeleteஇறந்த பின் புகளும் இந்த சமூகமும், ஊடகங்களும் அஸ்ரப் உயிருடன் இருக்கும் போதும் என்ன செய்தன என்று தெரியும்.
விமர்சிக்கப்பட முடியுமாக இருப்பவனே உன்மையான தலைவன். அதிகம் ஒருவரை சமுகம் விமர்சித்து கொன்டிருக்கிரது என்றால் அது அவனது செயற்பாட்டின் வினைத்திறனை காட்டுகிறது.
Its all for his own benefit not for societies benefit.. what he was done other than eastern province. every thing zero..
ReplyDeleteinthe helila nan porathe pericham pala karanukku vitrupotu busla povan nalla poduvingeda maapu
ReplyDelete