Header Ads



இனவெறியை பரப்பும் குழுவொன்று, பாராளுமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன ரணதுங்க எச்சரிக்கை

நாட்டை அழித்த பலரும் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மஹர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு நன்றி தெரிவிக்கும் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

தன் வெற்றிக்காக அரப்பணித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி, கடந்த 17ஆம் திகதி பெற்றுக் கொண்ட வெற்றியை தொடர்ந்து பாதுகாப்பதற்காக மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இம்முறை தேர்தலில் நாட்டை அழித்த குழுவொன்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் அவர்களின் சூழ்ச்சிக்கு மத்தியில் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இக்காரணங்களினால் நல்லாட்சி மற்றும் நேர்மையை பாதுகாப்பதற்காக மக்கள் தொடர்ந்து செயற்பட வேண்டும்.

நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசாங்கம் அமைப்பதற்கான செயற்பாட்டிற்கு கை வைத்தது கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி பெற்று கொண்ட வெற்றியை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அவசியம் காணப்பட்டமையினாலேயே.

கடந்த நாட்களில் காணப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக் கொண்டு எதிர்வரும் 05 வருடங்களுக்கு இந்நாட்டை தூய்மையான இரண்டு தலைவர்கள் கையில் ஒப்படைப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டது.

அதற்கு நீங்கள் பெரிய அர்ப்பணிப்பை செய்தீர்கள். எனினும் மறந்துவிடாதீர்கள் இவ் வெற்றிக்கு எதிராக செயற்படுகின்ற குழுவினாலும் இன்று நாடாளுமன்றத்திற்கு வர முடிந்துள்ளது.

இனவெறியை பரப்பி, நாட்டை பிளவடைய செய்து எப்படியோ அதிகாரத்தை பெற முயற்சிக்கும் அக் குழு இன்று நாடாளுமன்றில் செயற்படுகின்றார்கள் என்பதனை நாங்கள் மறந்து விட கூடாது.

இது குறித்து அவதானத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Well said...pray for good

    ReplyDelete
  2. My3 must take the blame for allowing them time to regroup. Immediate dismiss of
    parliament after his victory would have thrown them into the bin . People could have
    waited two months for 100 day programme . Now racists are inside your chamber
    with larger comfortable preferential voices to shout racism . THE ONLY OPTION NOW is creating more ministries . But still , a clever govt can escape without
    going beyond limit . 20 ministries and twenty deputies for UNP and 10 ministries
    plus ten deputies for the SLFP . That means 20 cross overs will be the deal.

    ReplyDelete

Powered by Blogger.