Header Ads



ஒரு முஸ்லிமின் பார்வையில், இலங்கை பாரளுமன்ற தேர்தல்

-அபூ இமான் ஸஹ்வி-

இலங்கை முஸ்லிம்கள் தன் சொந்த வீட்டுப் பிரச்சினை போல் மிகவும் அவதானத்துடன் எதிர்கொண்ட  தேர்தல்களில் இதுவும் ஒன்று. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இருந்த வீரியம் இந்தத் தேர்தலில்  இல்லாவிட்டாலும் அதே கவனத்தை ஆர்வத்தை மக்கள் செலுத்தியிருந்தனர்.

அல்லாஹ்வின் உதவியால் இத்தேர்தலில் முஸ்லிம்கள் தற்காலிகமாக சந்தோஷப்படும் நிகழ்வுகள் பல இடம்பெற்றுள்ளன. அதேபோல் எதிர்காலத்தில்  கவனம் செலுத்தி நடக்க வேண்டிய பல விடயங்களும் உள்ளன. அவற்றில் சில:

1. முஸ்லிம்களுக்கு நேரடியாக தலையிடியாகவும் மனவலியாகவும் செயற்பட்ட BBS நேரடியாக பெளத்த பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டு தோக்கடிக்கப்பட்டுள்ளார்கள். இது ஒரு சந்தோஷ செய்தியாகும். ஆனால் BBS  எனும் முஸிபத்து  இன்னும் நீங்கவில்லை. கூடுதல் அமைதியும் அவதானமும் தேவை.
2. தன் சுயநலத்துக்காக இனவாதத்தை ஊட்டி வளர்த்த மகிந்த எனும் மாபெரும் இனவாதியும் அவரது குடும்ப ஆட்சியும், அவரின் பரிவாரத்தின் எழுச்சியும் மீண்டும் ஒரு முறை தோக்கடிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

3. தன் சுய நலத்துக்காக முஸ்லிம் வாக்கை மஹிந்தவுக்கு கூட்டிக் கொடுக்க முயற்சித்தவர்களும் BBS போன்ற இனவாதிகளுக்கு முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக்கொடுத்த முஸ்லிம் பெயர் தாங்கிகளும் இத்தேர்தலில்  தோக்கடிக்கப்பட்டுள்ளார்கள். ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ், காதர், நஜீப் ஏ. மஜீத் போன்றோர்  நேரடியாகத் தேர்தலிலும், அஸ்வர், சத்தார் போன்றோர்  கொள்கை ரீதியாகவும்  தோக்கடிக்கப்பட்டு, முஸ்லிம் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு செல்லாக் காசாக்கப்பட்டுள்ளார்கள்.

4. அமைச்சர் பதவி கிடைத்தவுடன் சிலர் தேசியத் தலைவராகத் துடிக்கின்றனர்.  தலைவராக வரத் துடிப்போர், குறுக்குவழி நடப்போர்  ஒருபோதும் தலைவராகவும் முடியாது. அப்படித் தலைவரானால் அதில் நிலைக்கவும் முடியாது.

அமைச்சர் பதவி இருக்கும் வரை தான் அவர்  தலைவர், எம்பி,  ஊர் மக்களின் தங்க கம்பி எல்லாம். அமைச்சர் பதவி போனா சாதாரண தம்பியாகி விடுவர். நிலைக்க முடியாது. ஷேகு,  அவர் வழியில் பயணித்த  அதா போன்ற சில குறுநில மன்னர்கள் இதற்க்கு நல்ல உதாரணம்.

5. வன்னி அமைச்சர் இதே வழியில் பயனிப்பதாகத் தோன்றுகிறது. அவரைச் சுற்றியுள்ள பிரச்சினைகளும், சவால்களும் செயற்கைத் தனமானதாகத் தென்படுகின்றது. அவரின்  பொருளாதார நேர்மை கடுமையாக கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. அரசியல் காய் நகர்த்தல்கள் கூட திருவிளையாடல்கள் போல் தோன்றுகின்றது. இம்முறை வன்னியிலும் மட்டுவிலும் எச்சரிக்கையுடனான வெற்றியையே அவர் கட்சி  அடைந்துள்ளது. இன்னும் சில எம்பிகளுக்கு சொந்தம் கொண்டாடினாலும் அவை ஊரா வீட்டுப் பிள்ளைக்கு பெயர் வைத்தது போலே என்று சொல்லப்படுகிறது.

மற்றவர்களில் உள்ள அதிருப்தியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சாமார்த்தியம் தொடர்ந்து செல்லாது, நில்லாது, வெல்லாது.

6. முஸ்லிம் காங்கிரஸுக்கு  இந்தத் தேர்தல் கடும் தோல்வியே. வன்னியில், திருமலையில் தனக்கிருந்த ஆசனங்களை இழந்தது, பழமை வாய்ந்த ஒரு கட்சி, இரண்டு மாவட்ட  முஸ்லிம் மக்களின் மனங்ளில் இருந்து தன் இடத்தை இழந்தது சாதாரண விடயமல்ல கடும்  தோல்வியே. மட்டக்களப்பு  மாவட்டத்தில் NFGG கூட்டு  இல்லாவிட்டால் அங்கும்  அந்தோ கெதியாகியிருக்கும். திகாமடுல்லை மாவட்டத்தின் வெற்றியும்    எச்சரிக்கையுடனான வெற்றியே.

இன்றைய முஸ்லிம் காங்கிரஸை எதிர்ப்பவர்களில் நிறையபேர் சுயநலமிகள் இருக்கின்றனர். ஆனால் எல்லோரும் சுயநலமிகள் கிடையாது. ஆதரிப்போர்கள் எல்லோரும் விரும்பி ஆதரிப்போரும் கிடையாது. இதுதான் விதியென ஆதரிக்கும் அப்பாவிகள் அதிகம்.   ஒரே கோஷம் ஒரே வேஷம் எந்நாளும்  எடுபடாது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தேர்தல் இன்ஷாஅல்லாஹ் படு தோல்வியாக முடியலாம்.

7. எந்தப் பதவியும் இல்லாமலே ஒரு முற்போக்கு சிந்தனையும் செயற்பாடும் கொண்டவரான, அதிகார வர்க்கமும் சர்வதேச சமூகமும் அவரின் பேச்சுக்கு செவிசாய்க்கும் ஆளுமையும் கொண்டவரான  காத்தான்குடி அப்துர்ரஹ்மானின் வெற்றியும் கொழும்பில் முஜிபுர் ரஹ்மானின் வெற்றியும் முற்போக்கு சிந்தனைவாதிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊர் வாதம், கட்சிவாதம் போன்ற காரணங்களால் அப்துர்ரஹ்மான் எனும் ஒரு ஆளுமை தோக்கடிக்கப்பட்டுள்ளதாக  பலர் குமுறியதை  குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

8. மேலும் நிதிக்கும், நேர்மைக்கும், சட்டத்துக்கும் முதலிடம்  கொடுத்து நேர்மையான தேர்தலை நடத்த வழிவிட்ட ஜனாதிபதியையும்  பிரதமரையும் தைரியமாக நேர்மையாக தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையாளரையும்   பாராட்டாமல் இருக்க முடியாது.

9. முஸ்லிம்களில் பதவியில் இருந்து தோற்றங்களில் பெரும்பாலானோர் தன் நடத்தைகளால் தோற்றவர்களே. அவர்களை  வெல்லவைத்த மக்களே தோக்கவும் வைத்துள்ளார்கள் அல்லாஹ்வின் உதவியால். எனவே தோற்றவர்கள்  யாரையும் நொந்து மனதுக்குள் வெந்து வேலையில்லை. சிந்திய பால் முன் குந்தியழுவதாலும் பயனில்லை. தோல்விகள் தவறுகளை திருத்துவதற்கான சந்தர்ப்பம், மீண்டும் வெற்றிப் பாதையில் பயனிப்பதற்க்கான படிக்கட்டு.

மேலும், இத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் வெற்றி அவர்களின் சொந்த வெற்றியல்ல அது சமூகத்தின் வெற்றி. அல்லாஹ்வின் உதவியால் மக்களே வெல்ல வைத்தவர்கள். வெற்றியாளர்கள் மக்களின்  எஜமானர்கள் அல்ல. மாறாக   மக்களின் பிரதிநிதிகள். மக்களின் முன்னேற்றத்துக்காக உழைக்காமல் தங்களின் முன்னேற்றத்துக்காக உழைத்தால் அவர்கள்  அமானித மொசடிகாரர்கள், நயவஞ்சகர்கள், பாவிகள்.

10. நீங்கள் லஞ்சம், ஊழல், மோசடி போன்றவற்றில் ஈடுபட்டால், அவர்கள் நரகவாதிகள். மறுமையை விற்று இம்மையை வாங்கிய முட்டாள்கள்.

கடைசியாக ஒரு  ஹதீஸுடன் நிறைவாக்குகின்றேன்:

கைபர் யுத்தம் முடிவடைந்தது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தன் தோழர்களுடன் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை  பார்த்துக்கொண்டு வந்தார்கள். அப்போது ஸஹாபாக்கள் கொல்லப்பட்ட ஸஹாபாக்களை ஒவ்வொருவராகப் பார்த்து, இவர் ஷஹீத் இவர் ஷஹீத் என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள். இதேபோல் ஒரு ஸஹாபியைப் பார்த்து இவர் ஷஹீத் என்று சொன்னபோது நபியவர்கள்: "இல்லை ஒரு சால்வை மோசடி  விடயத்தில் நான் இவரை நரகத்தில் கண்டேன்" எனக் கூறினார்கள். (முஸ்லிம் கிரந்தத்தில் வரும் ஒரு நெடிய ஹதீஸின் சுருக்கம்)

கனீமத் (யுத்தத்தில் கிடைக்கும்)  பொருட்களை (அதாவது பொதுச் சொத்தை) உரிய முறையில் பகிர்வதற்கு முன்னால், அதில் ஒன்றை தனக்கென பதுக்கியதனால் ஒரு ஷஹீத் நரகவாதியாகின்றார்.

ஒரு முஸ்லிம் எல்லா நிலையிலும் முஸ்லிமாக இருக்க வேண்டும்.   எல்லா நிலையிலும் அல்லாஹ்வை நினைத்து வாழ வேண்டும்.

4 comments:

  1. A Critical Review & Very Good Advices

    ReplyDelete
  2. Critical Review & Very Good Advices

    ReplyDelete
  3. kthai asiriyar oru SLMC atharavalar pol ullar melodamake thoddu senrullar, kosti sandaiykalul kalutharuppukal kalaivaruthal ponra nikalvukal athikamaka naddakum oru katsiyay sutti kaddamal thadavi senrullar.

    ReplyDelete
  4. Muslims played the most crucial leading role in showing the way home for Mahinda
    and his chorus. The initiative was Colombo Municipal Council election win. That was
    the day foundation stone was laid and then came the resignation of Harin Fernando
    for Uva provincial council election. It is this election result that pushed Mahinda to
    wind up two years early , before the tide turns dangerous against him . The tide did
    not stop and only he had to stop. Muslims always had this power in democracy . We
    MUST understand and very clearly understand that our voting power in democracy
    saved us from the destruction that was waiting to happen. Muslims will have to be
    vigilant in times to come about new Azwars , Caders , Alawis and so on , There will
    always be replacements of old ones with new ones , because the games not over.
    It is a continuing game . So , non stop vigilance also should continue . We got to have a clear vision about people starting new political ventures in the name of our
    community for selfish ends . To conclude , Mujibur Rahman and Marikkar for the
    capital , are historic choices of Colombo Muslims . Mearikkar especially is a very
    eloquent young debater and speaker for the whole country that Muslims must be
    proud of . He had the support of all three communities .

    ReplyDelete

Powered by Blogger.