Header Ads



பேஸ்புக் அரசியலும், முஸ்லிம்களின் ஆன்மீக வரட்சியும்

- அபூ ஸைனப்-

பாடசாலைக் காலங்களில், நவீன தொழினுட்பத்தின் வளர்ச்சி சமூகத்திற்கு நன்மையா, தீமையா என்ற தலைப்பில் விவாத மேடைகள் அதிகம் அரங்கேறி இருக்கின்றன. அது பயனாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பது அதிகம் பேசு பொருளாகும்.

அரசியல் ஓய்ந்த கைகளோடு எமது முஸ்லிம் சகோதரர்கள் சமூக வலைத்தளங்களில் வேலிச்சண்டை பிடிக்கும் காட்சிகள் மிகவும் கவலை அளிக்கின்றன. இவற்றையெல்லாம் விட்டு ஓடி காடுகளில் வாழ்ந்தால் என்ன என்று தோன்றுகின்றது.

வென்றவர்கள் என்று கூறும் கட்சிக்காரர்களின் பெருமையும் தோற்றுப் போனோம் என்று அங்கலாய்க்கும் பலரின் பதில்களும் முகம் சுளிக்க வைக்கின்றன.

பாராளுமன்றம் இலங்கை மக்களுக்குரியது. செல்லப் போகும் 225 பேரும் மக்கள் பிரதிநிதிகள். அப்படி இருக்க வென்றவர்கள், தோற்றவர்கள் என்று யாரும் இல்லை. 225 பேரும் நாட்டை முன்னேற்றும் போது அது மக்கள் வெற்றி, அன்றேல் அது மக்கள் தோல்வி.

அண்ணல் பெருமானார் எவ்வளவு பொறுமைசாலியாக இருந்தார். அவர் ஒரு அரசியல் தலைவராக எளிமையாக வாழ்ந்து காட்டினார். வேளைக்குத் தொழுதார். தன் தோழர்களுக்கு எவ்வாறு பண்பாக வாழ வேண்டும் என்று கற்றுத்தந்தார். தனது இறுதிப் பேருரையில் ஒரு சகோதரனின் மானம் இன்னொருவருக்கு அமானிதம் என்றார்.

ஆனால் நாம், அரசியலை வைத்து நேரத்தை வீணடிக்கிறோம். தொழ நேரமில்லை, குர் ஆனைத் திறந்து பல வருடங்கள், நோய் விசாரிக்க நேரமில்லை, உறவினரைப் பார்க்க நேரமில்லை. ஆனால், முழுநேரமும் சமூக வலைத்தளத்தில் இன்னொருவனின் மானத்தில் கை வக்க நேரமிருக்கிறது. வென்று விட்டோம் என்று பெருமை அடிக்க நேரமிருக்கிறது, அரட்டை அடிக்க நேரமிருகின்றது. பாவம் நாம். நரகின் நெருப்புக்கு நாமே விறகு சேர்க்கின்றோம்.

படித்தவர்களும் இளைஞர்களும் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். இஸ்லாத்திற்காக உயிர் நீத்த தியாகிகள் எங்கே, நாம் எங்கே ?.

அழகாகச் சொன்னார் அண்ணல் பெருமானார், “அமானிதங்கள் பாழ்படுத்தப்படாதவரை உலக முடிவு நாள் வராது, அமானிதங்கள் பாழ்படுதல் என்றால் தகுதி அற்றவருக்கு பொறுப்பு வழங்குதல்”.

உலக அழிவு நாள் நெருங்கி விட்டது. அசராமல் இருக்கிறோம். நமக்குத்தான் எவ்வளவு பெருமை. இது ஆன்மீக வரட்சியின் உச்ச நிலை என்றால் மிகையில்லை.

சிந்திப்போம், சிறப்புற வாழ்வை அமைத்துக் கொள்வோம். வல்ல நாயன் துணை புரிய வேண்டும்.

1 comment:

  1. Ranil said , it is the social media that sent Mahinda home . Local media was under Mahinda control . That was possible because of the internet . Nobody should expect
    people to live disconnected from the achievements of present day developments ,
    development of technology. E-books are replacing Libraries. E-mails are replacing
    post offices,saving stamps and envelops. How many features are there in a mobile
    phone ? Telex machines are no more . Fax machines are already in their death bed.
    Banks are closing many of their cash counters introducing on line banking. Universities offer degrees on line . You don't have to attend classes . The whole world is becoming paperless. Air tickets have become E tickets . Even to go to Mecca you are now issued E ticket . Religion doesn't change . But the world is
    changing every day ! And Muslims all over the world are changing too. The middle
    east , where Islam was born , is the first to receive these new developments . Think positively .

    ReplyDelete

Powered by Blogger.