ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியுடன், பங்குச் சந்தையும் உயர்ந்தது
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றதை யடுத்து இலங்கை பங்குச் சந்தையில் சடுதியான பரிவர்த்தனை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இன்றறைய பங்குச் சந்தை நிலவரப்படி சுமார் 36 புள்ளிகள் வரை பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2015ம் ஆண்டின் ஆரம்பம் தொடக்கம் 2.4 வீத வளர்ச்சியை எட்டியிருந்த பங்குப் பரிவர்த்தனைகள், கடந்த ஒன்றரை மாத காலத்தினுள் 6.2 புள்ளிகள் வரை சடுதியான அதிகரிப்பை எட்டியுள்ளது.
அத்துடன் இலங்கை பங்குச் சந்தையில் இந்த ஆண்டின் அரையாண்டு காலப் பகுதிக்குள் மாத்திரம் 69 பில்லியன் ரூபா புதிதாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 30வீத முதலீடு வெளிநாட்டினர் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 70வீதம் இலங்கையர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment