Header Ads



"தேர்தலில் வெற்றிபெற, எந்த திட்டத்திற்கும் மஹிந்த தயார்"

 "நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி இனவாதத்தைத் தூண்டி தெற்கில் வெற்றிபெறுவதற்கு மஹிந்த ராஜபக்‌ஷ முயற்சிக்கின்றார்'' - என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.  

அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த மஹிந்த தரப்பினர் தயாராக இருக்கின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் தேசியக் கொடிக்கு ஒத்த 'சிங்களக் கொடி' ஒன்று பரப்புரை நடைபெற்ற மைதானத்தில் பறக்கவிடப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது. இந்தக் கொடியில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் அகற்றப்பட்டு, சிங்களப் பெரும்பான்மையினரின் கொடியாக அடையாளப்படுத்தியே இந்தக் கொடி வடிவமைக்கப்பபட்டிருந்தது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ­, அண்மையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் பங்கேற்றபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களும் இதேபோன்ற 'சிங்களக் கொடி'' ஒன்றை ஏந்தியிருந்தமை 

1 comment:

  1. தனிச்சிங்கள நாடு என்ற அடிப்படையில்தான் மகிந்தவின் சகலவிதமான காய் நகர்த்தல்களும்.இது விளங்காமல் சில பெயர் தாங்கி முஸ்லிம்கள் அவனுக்கு பின்னால் திரிகிறார்கள்தப்பித்தவறி மஹிந்த வற்றி பெற்றால் இன்னுமொரு பர்மா உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.அல்லாஹ் பாதுகாப்பானாக.ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.