Header Ads



ரவூப் ஹக்கீமிடம், அதாவுல்லா பகிரங்கமாக கேட்க விரும்புவது..?

(எம்.ஏ.றமீஸ்)

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியைத் தழுவுவது உறுதியாக தெரிந்தபோதிலும் முஸ்லிம்கள் துரோகிகள் என்ற பழி வரக்கூடாது என்பதற்காகவே அத்தேர்தலில் நான் அவர் பக்கம் நின்றேன் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஒலுவில் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக எமது மக்களை கதி கலங்கச் செய்து அனைத்துத் தரப்பினருக்கும் அச்சுறுத்தலாக விளங்கி வந்த கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நமது மக்களை நிம்மதியாக வாழ வைத்து நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு காரண கர்த்தாவாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்தார் என்பதற்காக அவரது இச்செயற்பாட்டுக்கு நன்றி செலுத்தும் வகையிலேயே நான் அவருக்கு கடந்த தேர்தலில் ஆதரவு வழங்கினேன்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அமைச்சுப் பொறுப்பினை வகித்த நான் நமது முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள மூவின சமூகத்திற்கும் பல்வேறான நன்மைகளையும் பாரிய அபிவிருத்திப் பணிகளையும் நான் செய்துள்ளேன். அவரிடமிருந்து நமது மக்களுக்காக நன்மைகளைப் பெற்றுவிட்டு இடைநடுவில் சந்தர்ப்பம் பார்த்து காலைவாரிவிடுவது நல்ல காரியமல்ல என்பதற்காகவே நான் கடந்த காலத்தில் அவருக்காக ஆதரவினை வழங்கினேன்.

மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியில் நான் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றேன் என சிலர் வேண்டுமென்று பிரசாரம் செய்கின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பது மஹிந்த ராஜபக்ஷவினுடைய கட்சியல்ல. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பது பொதுவான ஒரு கட்சியாகும் அதில் பல கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் இன்னும் செல்வதற்கு அவர் எனக்கு உறவுக்காரருமல்ல நான் அவருக்கு கடன்காரனுமல்ல.

கடந்த காலங்களில் தேர்தல்கள் வருகின்றபோது மஹிந்தவை எம் சமூகத்திற்கான எதிரியாக்கி  நமது மக்களுக்கு வேண்டுமென்றே உணர்ச்சியூட்டி வாக்குகளை சூறையாடி வெற்றி பெற்று மீண்டும் மஹிந்தவின் பக்கம் இணைந்து சலுகைகளையும் நன்மைகளையும் பெற்று வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிக்காரர்களைப்போல் எமக்கு நடந்து கொள்ள முடியாது. இவர்களின் இச்செயற்பாடுகளால் முஸ்லிம்கள் துரோகிகள் தொப்பி புரட்டிகள் என்ற பழி எமது சமூகத்திற்கு ஏற்பட்டது. அவ்வாறானவர்கள்போல் மனச்சாட்சியின்றிச் செயற்படுவதற்கு என் மனச்சாட்சி இடம்கொடுக்கவில்லை.

மறைந்த பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பல தியாகங்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை தோற்றுவித்தார். நமது மக்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு குரல் கொடுத்து மக்களின் விடியலுக்கான இயக்கமாக அவ்வாறு அவரால் தோற்றுவிக்கப்பட்ட அக்கட்சி இன்று நோக்கம் மாறி நெறிபுரண்ட நிலையில் பயணிக்கின்றது. அக்கட்சியின் தலைமை மக்களின் நன்மைக்காக செயற்படுவதற்குப் பதிலாக சுயநலத்தின் நிமித்தம் செயற்பட்டு வருகின்றார். இதனால்தான் அக்கட்சியில் தவிசாளர் என்ற பாரிய பொறுப்பினை வகித்து வந்த நானும் இன்னும் சிலரும் அக்கட்சியினை உதறித் தள்ளிவிட்ட வெளியேறி வந்தோம். மக்களின் செல்வாக்கினை தொடர்ந்தும் பெற்று தொடர்ச்சியாக பாராளுமன்;ற உறுப்பினர் பதவியினை வகிக்க வேண்டும் என்ற சுய நல எண்ணம் என்னிடம் இருந்திருந்தால் அக்கட்சியிலிருந்து நான் இன்றுவரை வேளியேறியிருக்க மாட்டேன். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க அக்கட்சியினால் தற்போது முடியாது. தொடர்ந்து பாசாங்கு செய்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்ற நிலைப்பாடு மனதில் எழுந்தபோது அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு மக்கள் நலனுக்காக அக்கட்சியிலிருந்து வெளியேறி வந்த பின்னர் எம்மால் முடிந்த உதவிகளையும் அபிவிருத்திகளையும் மக்களுக்காக செய்திருக்;கின்றோம். எமது செயற்பாடுகளை எதிரணியினர் வேண்டுமென்றே தூற்றினாலும் இறைவன் அறிந்திருக்கும் எமது செயற்பாடுகளை நிச்சயம் வரலாறு பேசும்.

வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டது, அட்டூழியங்கள் புரிந்து வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினை அழிப்பதற்கு அஞ்சாமல் குரல் கொடுத்தமை போன்ற எத்தனையோ வரலாற்றுத் தடயங்களை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். இவற்றையெல்லாம் சிலர் மறந்து விட்டு செயற்படுகின்றார்கள். இப்போதுள்ள உணர்வுகளுக்கு தீனி போட்டு மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தேர்தல்கால நடிகர்கள்போல் என்னால் ஒருபோதும் இயங்க முடியாது.

கடந்த காலத் தேர்தலின்போது தம்புள்ள பள்ளிவாசலா அல்லது மஹிந்த ராஜபக்ஷவா என மக்கள் மத்தியில் உணர்ச்சியினைத் தூண்டி அவர்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு இந்த நல்லாட்சியில் நகர அபிவிருத்தி அமைச்சுப் பதவி கிடைத்தது. கடந்த காலத்த்தில் தம்புள்ள பள்ளிவாசலினை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது நகர அபிவிருத்தி அதிகார சபையாகும். தேர்தல் காலத்தில் தம்புள்ள பள்ளிவாசலைக் காரணம் காட்டி அரசியல் செய்த இவர் இந்த நல்லாட்சியில் சுமார் ஆறுமாத காலம் நகர அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பினை வகித்த இவர் இப்பள்ளிவாசல் விடயத்தில் ஏதாவதொரு நகர்வினைச் செய்திருக்கின்றார் என்று கேட்கின்றேன். அப்பள்ளிவாசலுக்காக நிலத்தைப் பெற்றுக் கொள்ள என்ன முயற்சிகளைச் செய்யார்? அல்லது பள்ளிவாசலுக்கு ஒரு கல்லையேனும் பெறறுக் கொடுத்துள்ளாரா? என்று நான் பகிரங்கமாக கேட்கவிரும்புகினறேன். இந்த ஒரு செயற்பாடே போதும் இவர் நமது மக்களுக்காக செயற்படுகின்றாரா அல்லது சுயநலத்திற்காக போராடுகின்றாரா என்று.

கட்சி என்பது காலத்தின் தேவையாகும். கட்சி என்பது மதமல்ல. எமக்கு விரும்பினால் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியினை அமைக்கலாம் அல்லது மாற்றுக் கட்சியினைத் தோற்றுவிக்கலாம். நாம் உண்மையான அரசியல் பேசிவருவதால் குறுகிய காலத்தினுள் மக்கள எம்மை பாரியளவில் அங்கீகரித்திருக்கின்றார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசி அரசியல் செய்யும் எந்தத் தேவையும் எமக்கில்லை. நமது மக்கள் வடக்கு கிழக்குப் பிரிப்பிற்குப் பின் நிம்மதியாக வாழ்ந்துவரும் இத்தருணத்தில் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வடக்கையும் கிழக்கையும் இணைக்கவுள்ளாராம். வடக்கை கிழக்கோடு அது இணைப்பதற்கு ஹசன் அலியின் தந்தையின் சொத்தல்ல எனறார்

5 comments:

  1. தலைவர் அஷ்ரப் அவர்களின் தூரநோக்கு இப்போது நம்மத்தியிலிருக்கும் எந்தவொரு அரசியல் கட்சிகளிடமோ அதன் தலைவர்களிடமோ கிடையவே கிடையாது

    இவ்வாறு இருக்கும் நிலையில் காலத்திற்கு காலம் வந்து போகும் தேர்தல்களின் பிரச்சாரங்களுக்காக மாத்திரம் அம்மாபெரும் தலைவரை நினைவுகூரும் இவர்கள் அனைவருமே சுயநலவாதிகளே அன்றி வேறில்லை

    அத்துடன் இந்த அரசியல் சாக்கடை வண்டியில் ஏறி உக்கார்ந்து பயணிக்கும் நீங்கள் யாரும் இந்த விடயத்தில் உத்தமர்களும் கிடையாது

    தூய்மையான இதயசுத்தியுடன் நம் சமூகத்ற்கு சேவை செய்யும் எண்ணம் கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கெல்லாம் எதற்காக ஆளுக்கொரு கட்சியும் இத் தலைமைப்பதவி மோகமும்

    எனவே உங்களுக்கான வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள மற்றொருவர்மீது அபாண்டங்களை அள்ளி வீசுவதிலிருந்து உங்கள் நாவுகளை பேணிக்கொள்ளுங்கள்

    உங்கள் நலன்களுக்காக நம் சமூகத்தை முதலீடாக்கி இப்போது மட்டும் வாய் திறக்கும் நீங்கள் அனைவரும் இச் சமூகத்திற்காக (இஹ்லாஸுடன்) எப்போதாவது வாய்திறந்ததுண்டா அல்லது இச்சமூகத்தின் காவலர்களாக தங்களை பறைசாற்றிக்கொள்ளும் நீங்களெல்லாம் எப்போதாவது மஹ்ஷர் வெளியயும் இறைவனின் தண்டனையையும் நினைத்ததுண்டா

    இனிமேலாவது சிந்திப்பீர்களா?????

    ReplyDelete
  2. திரு அதாபுல்லா எல்லா மேடைகளிலும் கடந்த “முப்பது வருடங்களுக்கு மேலாக எமது மக்களை கதி கலங்கச் செய்த கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நமது மக்களை நிம்மதியாக வாழ வைத்து” என்று மகிந்தவின் துதிபாடுவதை தொழிலாகக் கொண்டுள்ளார். இதில் “யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்தான் நமது மக்கள் நிம்மதியற்று வாழ்ந்தார்கள்” என்பது சுயநல அரசியல் நடத்தும் இந்த அதாபுல்லாவுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்:
    • காவிகளின் அட்டகாசம்,
    • வெள்ளை வேன் கடத்தல்
    • முஸ்லிம்களின் வியாபாரத்தை திட்டமிட்டு சிதைத்தல்
    • ஞநசாராவின் அடாவடித்தனம்
    • கிரிஸ் பூதம்
    • பள்ளியுடைப்பு
    • ஹலால் ஒழிப்பு
    • அபாயாவுக்கு ஆப்பு
    போன்ற இன்னோரன்ன தொடர் துன்பங்களை ஏற்படுத்தியது யார்? மகிந்த அல்ல என்று மட்டும் சொல்லாதே, நீ கூறிய அல்லாஹ் உன்னைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றான். இத்தனை வருட அரசியலில் நீ சமுகத்திற்காக புடிங்கியது என்ன? உனது காழ்ப்புணர்ச்சியின் சூழ்ச்சியினால் அல்லவா நுரைச்சோலை வீடுகள் நாதியற்றுக் கிடக்கின்றன? இதுதான் நீ சமூகத்திற்காற்றிய சேவையா? அல்லது உன்னையும் உன் அடிவருடிகளையும் மக்கள் பணத்தில் வளர்த்துக் கொண்டாயே அதுவா?

    ReplyDelete
  3. இதே ஒலுவிலில்தான், இதோ பேசிய இவர்தான்...., அல்லாஹ்வை மறந்தவராக.., மஹிந்த வெல்லுவது நிச்சயிக்கப்பட்டது என்று வாய்கிழிய கத்திஇருந்தார்......!!

    இவர் தற்போது தம்புளள பள்ளிவாயல் பற்றி பேசுகிறார்ர்....அப்போது மஹிந்தவின் சால்வைக்குல் ஒளிந்து கொண்டுந்தவர்......!!, அப்போது முஸ்லிம் மூலை முடுக்குகளிலெல்லாம் ஆர்பார்ட்டம் நடந்த போதும் அவரின் ஊரிலே மட்டும் இவர் மஹிந்த்த விசுவாசத்தினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்ர் ...,,

    இப்பேர் பட்ட இவர்ர், இப்போது,, சுயநல அரசியலாமாம் என்று...ஏதோதோ பேசுகிறார்ர்..(பயம் தொற்றி விட்டதொ...!!)

    இதே ஒலுவிலில் மஹிந்த வெற்றி பெறுவது உறுதி எனக்கூறி நிற்பது....கேற்பவர்கள் மடையர்கள் என்று நினைப்பதானாலா....அல்லது ?? ,

    இங்கு அரசியல் (கட்சி) என்பது மதம் அல்ல வெனக்கூறிய அவரே...ஹகீம் மாறிவிடுபவர்..தான் உத்தமர் என காண்விளைவதுவும் தகுந்ததாகுமோ...!!


    அத்தோடு வடகிழக்கு என்பது ஹசனின் சொத்தல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்....ஆனால் அது ஒவ்வொரு கட்சியிடுமுடைய கொள்கை எனபதநஇநைனைஇதே ஒலுவிலில்தான், இதோ பேசிய இவர்தான்...., அல்லாஹ்வை மறந்தவராக.., மஹிந்த வெல்லுவது நிச்சயிக்கப்பட்டது என்று வாய்கிழிய கத்திஇருந்தார்......!!

    இவர் தற்போது தம்புளள பள்ளிவாயல் பற்றி பேசுகிறார்ர்....அப்போது மஹிந்தவின் சால்வைக்குல் ஒளிந்து கொண்டுந்தவர்......!!, அப்போது முஸ்லிம் மூலை முடுக்குகளிலெல்லாம் ஆர்பார்ட்டம் நடந்த போதும் அவரின் ஊரிலே மட்டும் இவர் மஹிந்த்த விசுவாசத்தினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்ர் ...,,

    இப்பேர் பட்ட இவர்ர், இப்போது,, சுயநல அரசியலாமாம் என்று...ஏதோதோ பேசுகிறார்ர்..(பயம் தொற்றி விட்டதொ...!!)

    இதே ஒலுவிலில் மஹிந்த வெற்றி பெறுவது உறுதி எனக்கூறி நிற்பது....கேற்பவர்கள் மடையர்கள் என்று நினைப்பதானாலா....அல்லது ?? ,

    இங்கு அரசியல் (கட்சி) என்பது மதம் அல்ல வெனக்கூறிய அவரே...ஹகீம் மாறிவிடுபவர்..தான் உத்தமர் என காண்விளைவதுவும் தகுந்ததாகுமோ...!!


    அத்தோடு வடகிழக்கு என்பது ஹசனின் சொத்தல்ல என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவரின் கட்சி கொள்கையின் கருத்து என்பதை விளங்கிக் கொள்ளவும் முன் பின் கருத்து க்கள் கூவுவுவதனால் சிந்தை ஏற்க மறந்ததுவும்வோ!!!

    ReplyDelete
  4. இந்தமுறை அதாவுல்லாஹ்,ஹிஸ்புல்லாஹ் மற்றும் இஸ்மாயில், சிராஜ் போன்றோர் படு தோல்வி அடைவது உறுதி. காரணம் என்னவென்றால் அதவுள்ளஹ்வும் ,ஹிஸ்புள்ளஹ்வும் மஹிந்தையை தூக்கிப்பிடித்து திரிவதால்இவர்களின் தோல்வி உறுதியாகி விட்டது.ஹிபுள்ளஹ்வுக்கு இன்னொரு நெருக்கடிதான் அப்துல் ரஹ்மான் தேர்தலில் குதித்த காரணம்.மட்டக்களப்பில் அமிரலி,அப்துல் ரஹ்மான்.அளிசாஹிர் மௌலாலா போன்றோராலும் ஹிஸ்புல்லாஹ்வின் தோல்வி உறுதியாகி விட்டது.அதாவுல்லாஹ்\வும்,அவருடன் சேர்ந்து வாக்கு கேக்கும் மற்றைய இருவுமாக (மூன்று பெரும் சேர்ந்து,ஒரு எம்பி வரமுடியாத அளவுக்குத்தான் வாக்கு எடுப்பார்கள்.மயில் கட்சியில் ஒருவர் முச்ளிம்கோங்க்ரசில் ஒருவர் வர வாய்ப்பு உள்ளது .அதாவுல்லாஹ் இம்முறை கனவிலும் இணைக்க முடியாது வெற்றி கிட்டும் என்று .الله اعلم.

    ReplyDelete
  5. அதவுல்லாஹ் நினைத்ததொன்று அல்லாஹ் முடிவாக்கியது வேறு ஐவேளைத்தொழுகையே இல்லாத ஒரு தேங்காய் காங்கிரஸின் தலைவர்தான் இவர்.வேற்று மத ஜனாதிபதி ஆர்.பிரேமதாச கூட சுபஹுக்கு முதல் எழும்பி கட்சிக்காரர்களை பொதுமக்களை சந்திப்பது அவர் வழக்கமாக இருந்தது ஆனால் தான் தான் தேசியத்தலைவர் என்று பிதற்றுமிவர் காலையில் எழும்புவதே பகல் 11மணிக்குப் பிறகுதான்.இவரெல்லாம் தலைவரென்று ஒரு கூட்டம் அலையுது மக்கள் விழிப்புடன் இருக்கினம்

    ReplyDelete

Powered by Blogger.