வெட்கம் கெட்ட சில அரசியல்வாதிகள், சொல்லும் பொய்களை கேளுங்கள் (வீடியோ)
நுகேகொடை – உடஹமுல்ல பகுதியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதம செயலாளர் சுசில் பிரேமஜயந்தவின் இல்லத்தில் நேற்றிரவு (02) விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
நேற்றிரவு ஆரம்பமான இந்த கலந்துரையாடல் இன்று அதிகாலை வரை நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பை அறிக்கையிடுவதற்கான வாய்ப்பு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
எனினும், அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிரதிநிதிகளின் காட்சிகளை ஔிப்பதிவு செய்வதற்கான வாய்ப்பு எமக்குக் கிட்டியது.
இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்களான டிலான் பெரேரா, மஹிந்தானந்த அளுத்கமகே, அநுர பிரியதர்ஷன யாப்பா, பசில் ராஜபக்ஸ, தினேஸ் குணவர்தன உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறுகின்ற வேட்புமனுத் தாக்கலுக்கான நேர்முகப் பரீட்சைக்கு இன்று காலை வருகை தந்திருந்த சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகளிடம் இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பதிலளித்த சுசில் பிரேமஜயந்த, இதுவொரு தனிப்பட்ட சந்திப்பென்றும் வேறொரு விடயத்தையும் தெரிவிக்கத் தயாராகவில்லை எனவும் குறிப்பிட்டார். (வீடியோ)

Post a Comment