Header Ads



மைத்திரியின் நடவடிக்கையானது, மக்களை ஆறடி மண்ணுக்குள் புதைப்பதற்கு நிகரானது - பேராசிரியர் சரத்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 62 லட்சம் மக்களை காட்டிக் கொடுத்து விட்டதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்க இணங்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இந்த நடவடிக்கையானது மைத்திரிக்கு வாக்களித்த 62 லட்சம் மக்களை ஆறடி மண்ணுக்குள் புதைப்பதற்கு நிகரானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கக் கூடாது எனக் கோரி கொழும்பு கோட்டேயில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற போது பேராசிரியர் சரத் விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.