கொதிக்கும் சட்டியில், ஆடும் நண்டு
கொதிக்கும் சட்டியில் ஆடும் நண்டைப் போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ செயற்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அரசியலில் மீளப் பிரவேசிக்கும் முயற்சியானது, உயிரிழக்கப் போகின்றோம் என அறியாமல் கொதிக்கும் சட்டியில் ஆடும் நண்டுகளின் செயற்பாட்டுக்கு நிகரானது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி வரையில் மஹிந்த ராஜபக்ஸ நினைத்ததனை செய்ய அனுமதிக்கப்படுவார் எனவும், எதிர்வரும் தேர்தலிலும் அவர் தோல்வியைத் தழுவுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை ஏமாற்றிய அரசியல்வாதிகளுக்கு இம்முறை மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கியதனை ஐக்கிய தேசியக் கட்சி பொருட்டாக கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொருட்களை வழங்கிய மஹிந்தவினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment